Purattasi 3rd Saturday 2025 Viratham in Tamil 
ஆன்மிகம்

புரட்டாசி 3வது சனிக்கிழமை இதை செய்யுங்கள் - மோட்சம் கிடைக்கும்!

புரட்டாசி மாதம் என்றாலே பொதுவாக எல்லோருடைய இல்லங்களிலும் ஆன்மிக சிந்தினை நித்தமும் ஊஞ்சலாடும். அப்படி இருக்கையில் புரட்டாசி 3 வது சனிக்கிழமையில் இருக்கும் உன்னதத்தையும், அதன் தன்மையும் அறியலாம்.

Bala Murugan

புரட்டாசி 3 வது சனிக்கிழமை :

Purattasi 3rd Saturday 2025 Viratham in Tamil : புரட்டாசி 3 வது சனி என்றால் அதன் மகத்துவம் குறித்து முன்னோர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் என பலரும் பல வித கருத்துக்கள் கூறுவர். இந்த புரட்டாசி மாதத்தில் தான் பெருமாள் தானே விரும்பி திருமலையில் தனது திருவடியை பதித்ததாக புராணங்கள் சொல்கின்றன. இந்த புரட்டாசி மாதத்தில் மிகவும் முக்கியமானது 3ம் சனிக்கிழமை அன்று பெருமாள் வழிபாடு செய்வது, பெருமாள் அருளைப் பெறவும், சனியின் தோஷங்கள் நீங்க மற்றும் முன்னோர்களுக்கு மோட்சம் கிடைக்கவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அசைவம் தவிர்க்க வேண்டும் :

உணவு முறையை மிகவும் நேர்த்தியாக கடைபிடிக்க வேண்டும் அதாவது, அசைவம் தவிர்த்து சைவ உணவு உண்டு விரதம் இருந்து(Why No Non Veg in Purattasi Month), பெருமாளுக்கு தளிகை (படையல்) படைத்து, கோவில்களுக்கு சென்று வழிபடுவது சிறந்த பலன்களைத் தரும். இதில் சமைக்கும்பொழுது பெருமாளின் திருநாமத்தை சொல்லிக்கொண்டே சமைத்தால், சாப்பிடுபவர்களுக்கு உடல் நலம் அதிகரித்து, எந்தவித நோய்களும் ஒன்றாது என்று கூறப்படுகிறது. எனவே அதன் பலன் அறிந்து, சாப்பிடும் முறையை முற்றிலும் யோசித்து அதற்கேற்றவாறு இந்த மாதம் கடைபிடியுங்கள் என்று ஆன்மீக சொற்பொழிவாளர்கள் கூறி வருகின்றனர்.

வழிபாட்டின் பலன்

புரட்டாசி மாதம் (Purattasi Month 2025) என்பது மகாவிஷ்ணுவுக்கு மிகவும் உகந்த மாதமாக சொல்லப்படுகிறது. எனவே இந்த மாதத்தில் அவரை வழிபடுவது பல நன்மைகளையும், 16 வகையான செல்வங்களையும் அள்ளித்தரும் என்ற நம்பிக்கை பல நூற்றாண்டுகாளக இருந்து வருகிறது.

சனிக்கிழமையின் பலன்கள்:

புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம்(Saturday Viratham in Purattasi Month) மேற்கொள்வதன் மூலம், சனி பகவானால் ஏற்படும் கெடுபலன்கள் நீங்கி, வாழ்வில் சுபகாரியங்கள் நடைபெறும். மேலும் நன்மைகள் பெருகி சுபிட்சம் உண்டாகும்.

முன்னோர்களை வழிபடுதல்:

இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது அவர்களின் ஆசியையும், மோட்சத்தையும் பெற்றுத்தரும் என்றும் நம்பப்படுகிறது. அதனால் 3 ஆம் சனிக்கிழமையை புரட்டாசியில் தவறவிடாமல், முன்னோர்களை நினைவு கூர்ந்து தர்ப்பணம் செய்திடல் வேண்டும்.

வழிபாட்டு முறைகள்:

சைவ விரதம்: இந்த நாளில் அசைவ உணவைத் தவிர்த்து, சைவ உணவை மட்டுமே உட்கொண்டு விரதம் இருப்பது அவசியம். மேலும், வீட்டில் அல்லது கோவிலில் பெருமாளுக்கு தளிகை அல்லது படையல் படைப்பது மிக முக்கியமானதாகவும், விரதம் இருப்பவர்களுக்கு அவசியமான ஒன்றாகவும் கருதப்படுகிறது.

கோவில் தரிசனம்:

திருப்பதி போன்ற பெருமாள் கோவில்களுக்குச் சென்று வழிபடுவது அல்லது அருகில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்று, கோவிலில் மற்றவர்களுக்கு உதவுவது அல்லது கோவில் வேைலைகளை செய்வது உள்ளிட்டவை்யும் நன்மை தரும் .

மேலும் படிக்க : Puratasi: புரட்டாசியில் அசைவம் கூடாது: ஆன்மீகத்தொடு கலந்த அறிவியல்

புரட்டாசியில் கடன்

மந்திர பாராயணம்: பெருமாளின் மந்திரங்களை உச்சரிப்பதும், பஜனைகள் பாடுவதும் புண்ணியத்தைத் தரும். இதில் குறிப்பாக செய்யக் கூடாதவை என்றால் புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும்(Purattasi Saturday Viratham) கடன் கொடுக்கக் கூடாது, இது பண நெருக்கடியை ஏற்படுத்தி, வாழ்வில் பல்வேறு சிக்கல்களை உண்டு செய்து விடும் என நம்பப்படுகிறது.

====