
புண்ணியம் தரும் புரட்டாசி :
Purattasi Month 2025 Non Veg Scientific Reason in Tamil : ஒரு ஆண்டில் தமிழ் மாதங்கள் 12 இருந்தாலும், புரட்டாசி மாதத்திற்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு. அது என்னவென்றால் புரட்டாசி வந்தால் அசைவம் சாப்பிடக் கூடாது என்பார்கள். அதன் பின்னணி கதைகள், அறிவியல் ரீதியான காரணத்தையும் பார்க்கலாம். புரட்டாசி மாதம் வந்தால் போதும், அசைவ பிரியர்கள் கவலையில் ஆழ்ந்து விடுவார்கள். ஒருமாதம் அசைவம் சாப்பிடக் கூடாது என்பது அவர்களை பொருத்தவரை பெரிய விஷயம் தான்.
பெருமாளுக்கு உகந்த புரட்டாசி :
தமிழ் மாதமான புரட்டாசி. ஆங்கில மாதங்களில் செப்டம்பர் மத்தியில் தொடங்கி அக்டோபர் 2வது வாரம்(Purattasi 2025 Week) வரை நீடிக்கும். பெருமாளுக்கு உகந்த மாதமாகக் புரட்டாசி கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் இந்துக்கள் விரதம்(Purattasi Viratham) இருந்து, பெருமாளை வணங்குவது வழக்கம். மேலும், இந்த மாதத்தில் அசைவம் சாப்பிடுவது, புகைப்பழக்கம், மதுப் பழக்கத்தை நிறுத்துவதும் வழக்கமாக உள்ளது.
மழைக்காலம் தொடங்கும் புரட்டாசி :
ஜோதிட சாஸ்திரப்படி 6வது ராசியான கன்னி ராசிக்குரிய மாதம் புரட்டாசி. அதற்கு அதிபதி புதன். புதனுக்குரிய தேவதை மகாவிஷ்ணு. சைவ தேவதையான புதன் மாதம் என்பதால் அந்த மாதம் முழுதும் சைவ உணவுடன் பெருமாள் வழிபாட்டில் இருக்க வேண்டும் என்பது ஐதீகம். காரணம் - புரட்டாசி மாதம்(Purattasi Month Rain) மழைக்காலம் தொடங்கும் மாதமாகும்.
வெப்பத்தை வெளியேற்றும் பூமி :
இதுவரை இருந்த வெப்பம், காற்று குறைந்து மழை தொடங்கும் காலமாகும். இதுவரை உஷ்ணமாக இருந்த பூமி, மழை பெய்யப் பெய்ய தன்னுள் இருக்கும் சூட்டை வெளியேற்றும். எனவே, அந்தக் காலத்தில் உடலுக்கு சூட்டினை கொடுக்கும் மாமிசத்தை உண்பது உபாதைகளுக்கு(Why No Non Veg in Purattasi) வழி வகுக்கும்.
உடல் உபாதைகள் அதிகரிக்கும் :
வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், குறைவாக பெய்யும் மழையினால் நோய் தோற்று ஏற்பட்டு சளி, ஜுரம் போன்றவை அதிகரிக்கும். இதன் காரணமாகவே புரட்டாசி மாதத்தில் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்(Purattasi Month No Non Veg Reason) என நம் முன்னோர்கள் கூறிச் சென்று இருக்கிறார்கள்.
நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் துளசி :
பகலில் நல்ல வெயில், இரவில் மழை என இயற்கை மாற்றத்துடன் இருக்கும் புரட்டாசியில், ஏற்படும் உடல் நல பிரச்னையை, பெருமாள் கோயிலில் கொடுக்கப்படும் துளசி தீர்த்தம் கட்டுப்படுத்தும். என வேதான் புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்ற பழக்கத்தை வைத்துள்ளனர். துளசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும்.
மேலும் படிக்க : பிறந்தது புரட்டாசி 2025 : திருமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
முன்னோர் வகுத்து அருமையான விதி :
புது மழை காரணமாக தொற்று நோய்கள் ஏற்படலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வதன் மூலல் பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ளலாம். இதை உணர்ந்து தான் நம் முன்னோர்கள், புரட்டாசியில் அசைவம் சாப்பிடக் கூடாது என்பதை இறை வழிபாட்டுடன் சேர்ந்து கொண்டு வந்து இருக்கிறார்கள். நாமும் புனித மாதமான புரட்டாசியில், அசைவம் தவிர்த்து, நோய் தொற்று அண்டாமல், பெருமாள் வழிபட்டு நன்மைகளை பெறுவோமாக!.
====