Sabarimalai Ayyappan Temple Opening Date 2025 in Aadi Month Special Pooja in Tamil 
ஆன்மிகம்

ஐயப்பன் கோவில் நடை திறப்பு : தரிசனத்திற்காக குவியும் பக்தர்கள்

Sabarimalai Ayyappan Temple Opening Date 2025 : சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஆடி மாத பூஜைகளுக்காக திறக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

Kannan

சபரிமலை ஐயப்பன் கோவில் :

Sabarimala Ayyappan Temple Opening Date 2025 : கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவில் உலகப் புகழ் பெற்றதாகும். இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையின் போது லட்சக் கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து, ஐயப்பனை தரிசித்து செல்வார்கள்.

ஆடி மாத பூஜை :

அதன்பின்னர் கோவில் நடை அடைக்கப்பட்டு மாதம் தோறும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். அப்போதும் பக்தர்கள் ஐயப்பன் கோவில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி, ஆடி மாத பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை(Ayyappan Temple Open) திறக்கப்பட்டது. நவக்கிரக கோவில் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக 11ஆம் தேதி திறக்கப்பட்ட கோவில் நடை 13-ஆம் தேதி இரவு மூடப்பட்டது.

நாளை முதல் பக்தர்கள் அனுமதி :

முதல் நாளான இன்று கணபதி ஹோமம், உஷ பூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும். தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார்

ஐயப்பன் சிறப்பு படி பூஜை :

நாளை அதிகாலை கோவில் திறக்கப்பட்டதும், உதயாஸ்தமய பூஜை, நெய் அபிஷேகம், படி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடத்தப்படும். பின்னர் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்(Ayyappan Darshan). ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே சபரிமலைக்கு வர முடியும். 21ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்காக கோவில் நடை திறந்திருக்கும்.

மேலும் படிக்க : திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா

======