
உலகப் புகழ்பெற்ற கேரள மாநிலத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தேறியது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில், திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலும் ஒன்று.
108 வைணவத் தலங்களில் ஒன்றான இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக் கணக்கானோர் வந்து வழிபாடு நடத்துகின்றனர்.
கடைசியாக இந்தக் கோயிலில் 1750ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. மார்த்தாண்ட வர்மா மகாராஜா காலத்தில் இந்த விழா நடத்தப்பட்டது.
இந்தக் கோயிலில் புனரமைப்பு பணிகள் சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.
மூலவர் ராஜ கோபுரங்களில் உள்ள கும்பங்களில், 275 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த அவரி நெல்விதைகள் தமிழகத்தில் இருந்து விளைவிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டவையாகும்.
குடமுழுக்கை ஒட்டி, பழைய நெல் அகற்றப்பட்டு புதிதாக அறுவடை செய்யப்பட்ட 150 கிலோ அவரி நெல்,கோபுர கலசங்களில் நிரப்பப்பட்டு குடமுழுக்கு விழா சிறப்பாக நடத்தப்பட்டது.
2 நூற்றாண்டுகளை கடந்த பிறகு நடைபெற்ற குடகுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோபுர கலசங்கள் மீது கோயில் தந்திரி மற்றும் வேத பண்டிதர்கள் புனிதநீரை ஊற்றி குடமுழுக்கை சிறப்பாக நடத்தினர்.