கொமதேகவுக்கு 2 தொகுதி
DMK KMDK Alliance 2026 : திமுக தலைமையில் கூட்டணியில் ஒரு கட்சியாக அங்கம் வகிக்கும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு (கொமதேக) இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக தரப்பில் வெளியான அறிக்கை
வருகிற 2026 சட்டமன்றப் பொதுத்தேர்தலில், முதல்வர் ஸ்டாலினும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரனும் தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசினர்.
அதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, தமிழகத்தில் 2சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் என்று குறிப்பிட்டுள்ளது
உதயசூரியன் சின்னத்தில் போட்டி
வருகிற சட்டமன்ற தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு (கொமதேக) இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் ,அக்கட்சியானது "உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்" என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
மேலும் படிக்க :TN Assembly Elections : ”26 கட்சி கூட்டணியுடன் திமுக” : 21 கட்சிகளுக்கு தேர்தலில் சீட் : 173 தொகுதிகளில் உதய சூரியன்!
கொமதேக பொதுச்செயலாளர் கொங்கு ஈஸ்வரன் கூறியதாவது
தொகுதி பங்கீடு அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகு பேசிய அவர் கூட்டணியின் நலன் கருதியும், நல்லதொரு ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் பேச்சுவார்த்தை சுமுகமாக பேச்சு நிறைவுபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்