

தமிழக சட்டமன்ற தேர்தல்
DMK face Assembly election with 26 Party alliance : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அடுத்த வாரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிடும் எனத் தெரிகிறது. ஏப்ரல் இறுதியில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. எனவே, அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகின்றன.
26 கட்சிகளுடன் திமுக கூட்டணி
அந்த வகையில் திமுக கூட்டணியில் எத்தனை கட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன என்பது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டு விட்டது. அதன்படி, வரும் சட்டமன்ற தேர்தலை 26 கட்சிகள் கொண்ட மெகா கூட்டணியுடன் திமுக சந்திக்கிறது.
21 கட்சிகளுக்கு தேர்தலில் சீட்
இதில் 21 கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிடும் வகையில் சீட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
26 கட்சிகளோடு கூட்டணி
திமுக கூட்டணியில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மதிமுக.,இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுக்கு கடந்தமுறை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கூட்டணியில் புதிய கட்சிகள்
இம்முறை திமுக கூட்டணியில் தேமுதிக, மக்கள் நீதி மய்யம், எஸ்.டி.பி.ஐ., மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.
எனவே இந்த கட்சிகளுக்கும் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டிய நிலை திமுகவிற்கு ஏற்பட்டுள்ளது. சில கட்சிகளுக்கு குறைந்தபட்சம் ஒரு தொகுதியாவது ஒதுக்க வேண்டி இருக்கும்.
ஆதி தமிழர் பேரவை,மூவேந்தர் முன்னேற்ற கழகம், சமத்துவ மக்கள் கழகம் போன்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
156 இடங்களில் திமுக போட்டி?
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக மட்டும் 156 இடங்களில் களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு 78 தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளது.
உதய சூரியனில் 173 பேர் போட்டி?
அதே நேரம் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒரு சில கட்சிகள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் களம் இறங்குகிறது.
அந்த வகையில் 18 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில் 173 தொகுதிகளில் திமுக போட்டியிடும் என்று தெரிகிறது.
திமுகவில் தொகுதி பங்கீடு
காங்கிரசுக்கு 28 தொகுதிகளில் ஒதுக்கப்பட்ட நிலையில், தேமுதிகவிற்கு 8, விசிக 7, இந்திய கம்யூனிஸ்ட் 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6, மதிமுக 6, தமிழக வாழ்வுரிமை கட்சி 2, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, மனிதநேய மக்கள் கட்சி 2, எஸ்.டி.பி.ஐ. 2, மக்கள் நீதி மய்யம் 2 தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிகிறது.
மற்ற கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியை ஒதுக்கி விட்டு, தேர்தல் அறிக்கை, பிரசாரத்தில் கவனம் செலுத்த திமுக தலைமை முடிவு செய்துள்ளது.
===============================