TVK Vijay Campaign Tour in Thiruvarur 
தமிழ்நாடு

”உங்க விஜய் நான் வரேன்” : நாகை, திருவாரூரில் நாளை பிரசாரம்

TVK Vijay Campaign Tour in Thiruvarur : தமிழக வெற்றிக் கழகத் தலைவரான விஜய், தனது சுற்றுப்பயணத்தின் அடுத்தக்கட்டமாக, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நாளை சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

Kannan

TVK Vijay Campaign Tour in Thiruvarur : வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” என்ற லட்சியத்தோடு, மக்கள் சந்திப்பு பயணத்தை கடந்த வாரம் ( செப்டம்பர் 13ம் தேதி ) திருச்சியில் தொடங்கினார். வாரந்தோறும் சனிக்கிழமை அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத்தில் அவர் நாளை சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்திக்கிறார்.

நாகை, திருவாரூரில் நாளை பிரசாரம் :

நாகப்பட்டினம், புத்தூர் அண்ணா சிலை சந்திப்பு அருகே காலை 11.00 மணிக்கும், திருவாரூர் மாவட்டம், நகராட்சி அலுவலகம் அருகில், தெற்கு வீதியில் மாலை 3.00 மணிக்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி(TVK Vijay Thiruvarur Campaign) நடைபெறும் என தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.

காவல்துறை கடும் கட்டுப்பாடுகள் :

விஜய் சுற்றுப் பயணம்(TVK Vijay Tour) மக்கள் சந்திப்புக்கு காவல்துறை 20 கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. அதன்படி, விஜய்யின் பிரச்சார வாகனத்தை தொண்டர்கள் தொடர்ந்து செல்லக் கூடாது, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது, ரோடு ஷோ நடத்தக்கூடாது, பிரச்சாரம் அரை மணி நேரத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் இப்படிப்பட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க : ”சொன்னீங்களே? செய்தீர்களா?” : கேள்விகளால் திமுக அரசை துளைத்த விஜய்

திருச்சியில் விஜய் பிரசாரத்திற்கு வந்த போது, விமான நிலையத்தில் இருந்து பிரசாரம் நடைபெற இருந்த இடத்தை அவர் சென்றடைய 5 மணி நேரம் பிடித்தது. 12 நிமிடங்களில் கடக்க வேண்டிய தூரம், தவெக தொண்டர்கள் திரண்டதால், பல மணி நேரம் பிடித்தது. இதன் காரணமாக திருச்சி மாநகரமே பலமணி நேரம் ஸ்தம்பித்தது.