”சொன்னீங்களே? செய்தீர்களா?” : கேள்விகளால் திமுக அரசை துளைத்த விஜய்

TVK Vijay Slams DMK in Trichy Campaign : கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அரசு தமிழக மக்களை வஞ்சித்து விட்டதாக, தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டி இருக்கிறார்.
TVK Vijay Slams DMK in Trichy Campaign News in Tamil
TVK Vijay Slams DMK in Trichy Campaign News in Tamil
2 min read

தீவிர அரசியலில் விஜய் :

TVK Vijay Slams DMK in Trichy Campaign : தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் முனைப்புடன் அரசியலை முன்னெடுத்து வருகிறார் நடிகர் விஜய். இரண்டு முறை கட்சி மாநாடு, பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை நடத்தி தமிழக மக்களை தன்பக்கம் ஈர்த்து வரும் அவர், திருச்சியில் இன்று அரசியல் பிரசார பயணத்தை தொடங்கினார்.

திக்குமுக்காடிய திருச்சி :

தமிழகமே எதிர்பார்க்காத அதிசயம் திருச்சியில் இன்று அரங்கேறியது. விமான நிலையத்தில் இருந்து பிரசாரம் செய்யும் இடமான மரக்கடை பகுதிக்கு ஒரு வாகனத்தில் 8 நிமிடங்களில் சென்று விட முடியும். ஆனால் இந்த தூரத்தை கடக்க விஜய் 4 மணி நேரம் எடுத்துக் கொண்டார். அப்படி என்ன ஆமை வேகம். இதற்கு அவர் காரணமல்ல அவருக்காக திரண்ட மக்கள் கூட்டம் தான் பயணத்தை தாமதப்படுத்தியது.

மக்கள் வெள்ளத்தில் விஜய் :

வழிநெடுகிலும் மக்கள் வெள்ளம், தொண்டர்கள் எழுச்சி என திருச்சி மாநகரமே திக்கித் திணறியது. 10.30 மணிக்கு பிரசாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் மதியம் 1.30 மணிக்கு அங்கு சென்றார் விஜய். கூடியிருந்த பல்லாயிரக் கணக்கானோர் இடையே உரையாற்ற தொடங்கிய விஜய், போருக்கு முன்பு குலதெய்வத்தை கும்பிட்டு விட்டு செல்வது போல, திருச்சி வந்து இருக்கிறேன்.

திமுக மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டு :

திருச்சி என்றாலே திருப்புமுனை தான்(TVK Vijay Trichy Campaign Speech). அண்ணாவுக்கும், எம்ஜிஆருக்கும் திருப்பதை தந்த இடம் மலைக்கோட்டையான திருச்சி. உங்களை சந்திக்கவே நான் வந்து இருக்கிறேன். தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றியதா எனக் கேள்வி எழுப்பினார். மக்கள் நலப் பணியாளர்கள், அரசு ஊழியர்களுக்கு நீங்கள் கொடுத்த உறுதிமொழி என்ன ஆனது?

திமுக அரசுக்கு சரமாரி கேள்வி? :

இப்படிப்பட்ட திமுகவுக்கு நீங்கள் மீண்டும் ஓட்டு போடுவீங்களா என்று விஜய் கேட்க, கூடியிருந்தவர்கள் ”மாட்டோம், மாட்டோம்” என பதிலளித்தனர். மகளிர் உதவித்தொகை எல்லோருக்கும் கிடைக்கவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றீர்களே அதை ஏன் செய்யவில்லை. விடியல் பயணத்தில் பெண்கள் அவமானப்படுத்தப்பட்டனர். திருச்சி தொடர்பான பிரச்சினைகளையும் திமுக அரசு(TVK Vijay Slams DMK) நிறைவேற்றவில்லை.

மேலும் படிக்க : TVK Vijay : குலுங்கியது திருச்சி : தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்

மைக் வேலை செய்யவில்லை, தொண்டர்கள் ஏமாற்றம் :

தொழில்நுட்ப காரணமாக விஜய் பயன்படுத்திய இரண்டு ஒலிபெருக்கியும் வேலை செய்யவில்லை. இதன் காரணமாக தொலைக்காட்சிகளில் செய்யப்பட்ட நேரலையிலும் அவரது பேச்சை கேட்க முடியவில்லை. எனவே தனது பரப்புரையை சீக்கிரமே நிறைவு செய்தார் விஜய். இதன் காரணமாக ஏழு மணி நேரமாக விஜய் பேச்சை கேட்க காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றத்தில் ஆழ்ந்தனர்.

=============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in