TVK Vijay Campaign Tour in Namakkal 
தமிழ்நாடு

திராவிட கட்சிகள் வேண்டாம் : ’நாங்கள் ஆட்சிக்கு வந்தால்’ வாக்குறுதி

TVK Vijay Campaign Tour in Namakkal : ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் மக்களுக்காக எதையும் செய்யவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நடைமுறைக்கு சாத்தியமானதை செய்வோம் என்று விஜய் தெரிவித்தார்.

Kannan

தவெக தலைவர் விஜய் பிரசாரம் :

TVK Vijay Campaign Tour in Namakkal : 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக மக்களுடன் சந்திப்பு பிரசாரத்தை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், முன்னெடுத்து வருகிறார். கடந்த 13ம் தேதி சனிக்கிழமை திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார். அரியலூரில் நிறைவு செய்தார். கடந்த சனிக்கிழமை நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார். தொண்டர்களின் பெரும் வரவேற்பால் அவர் பிரசார இடத்திற்கு செல்வதற்கே பலமணி நேரம் ஆகிறது. அவருக்கு கூடும் கூட்டம் தமிழக அரசியல் கட்சிகளை ஒருவித அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது என்றே சொல்லலாம்.

ஆர்ப்பரித்த கூட்டம், உற்சாக வரவேற்பு :

மூன்றாவது வாரமாக இன்றைய தினம் நாமக்கல் மற்றும் கரூரில் அவர் பிரசாரம் செய்கிறார். திமுக கோட்டையில் அவர் மக்களை சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி, பின்னர் அங்கிருந்து கார் மூலம் நாமக்கல் சென்ற அவருக்கு வழி நெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசார வாகனத்திற்கு மாறி அவர் பயணித்த போது, தொண்டர்கள் அதிக அளவில் திரண்டு இருந்ததால், நாமக்கல்லை சென்றடைய பலமணி நேரம் பிடித்தது.

நாமக்கல்லில் விஜய் எழுச்சி பிரசாரம் :

பிற்பகல் சுமார் 3 மண அளவில் பிரசாரம் நடைபெறும் இடத்தை சென்றடைந்தார் நடிகர் விஜய்(Vijay Campaign Speech). பிரசார வாகனத்தில் இருந்து கூடியிருந்த மக்களின் எழுச்சிக்கு இடையே உரையாற்றிய அவர், “ எல்லாரும் எப்படி இருக்கீங்க? சாரி கொஞ்சம் லேட் ஆகி விட்டது. என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என்னுடைய வணக்கம்.

சொன்னாங்களே செஞ்சாங்களா? :

போக்குவரத்து துறையின் கட்டுமான மையமாக நாமக்கல் திகழ்கிறது. நாமக்கல் முட்டையும் உலகப் புகழ் பெற்றது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையை பெருமையை குறிப்பிடாமல் இருக்க முடியாது.

வாக்குறுதி கொடுத்தாங்களே, சொன்னாங்களே செஞ்சாங்களா? நாமக்கல் மாவட்டத்தில் தானிய சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என்ற வாக்குறுதி என்னாச்சு? கொப்பரை தேங்காயை தமிழக அரசே கொள்முதல் செய்யும் என்றார்களே செஞ்சாங்களா? நியாய விலைக் கடைகளை வெல்லம், நாட்டு சர்க்கரை, பொக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், சொன்னாங்களே செஞ்சாங்களா?...

கிட்னி திருட்டு - தண்டனை நிச்சயம் :

நாமக்கலில் ஆளும் கட்சி எம்எல்ஏவுக்கான தனியார் மருத்துவமனையில் கிட்னி திருட்டு(Namakkal Kidney Theft) நடந்து இருக்கு. திமுக அரசு வாய் திறக்காமல் இருப்பது எதற்காக?. தவெக ஆட்சி அமைந்ததும் கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவாங்க. கந்து வட்டி கொடுமையை திமுக அரசு தடுக்க தவறி விட்டதால தான் கிட்னி கொடுமைகள் நடக்குது.

பொய்யான வாக்குறுதி தர மாட்டோம் :

அடிப்படை வசதிகள் இல்லை என்பதே மக்களின் முக்கிய கோரிக்கையா இருக்கு. திமுக மாதிரி பொய்யான வாக்குறுதிகள் நாங்க கொடுக்க மாட்டோம். முதல்வர் மாதிரி பொய்யான வாக்குறுதி தர மாட்டோம். பாஜகவோட சேரவே மாட்டோம். திமுகவை போல நடந்து கொள்ள மாட்டோம். அம்மா, அம்மான்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிட்டு, பாஜகவோட கூட்டணி வைக்கும் அதிமுக மாதிரி இருக்க மாட்டோம்.

மேலும் படிக்க : ’முப்பெரும் விழாவை முறியடிப்பாரா விஜய்’ : கரூரில் நாளை பிரசாரம்

2026ல் வெற்றி நிச்சயம் :

அதிமுக - பாஜக கூட்டணி மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அதைசமயம் பாஜகவோட திமுக மறைமுக கூட்டணி இருக்கு. வரும் தேர்தலில் திமுகவுக்கு ஓட்டு போட்டா அது, பாஜகவுக்கு போட்ட மாதிரி, எனவே மக்கள் யோசித்து முடிவு எடுக்க வேண்டும்" இவ்வாறு விஜய் பரப்புரை மேற்கொண்டார்.

==========