’முப்பெரும் விழாவை முறியடிப்பாரா விஜய்’ : கரூரில் நாளை பிரசாரம்

TVK Vijay Campaign in Karur : கரூரில் விஜய் நாளை பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், திமுகவின் முப்பெரும் விழாவை முறியடிக்கும் வகையில் கூட்டத்தை கூட்ட திட்டமிடப்பட்டு இருக்கிறது.
TVK Vijay Campaign in Karur
TVK Vijay Campaign in Karur
2 min read

தமிழக வெற்றிக் கழகம் :

TVK Vijay Campaign in Karur : கட்சி தொடங்கிய ஓராண்டிற்குள் இரண்டு மாநாடுகளை நடத்தி, கூட்டத்தை கூட்டி தமிழக அரசியல் கட்சிகளை மிரட்டி இருக்கிறார் நடிகர் விஜய். மதுரை மாநாட்டில் இரண்டரை லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அதை முறியடிக்கும் வகையில், கரூரில் திமுக முப்பெரும் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தியது.

திமுக முப்பெரும் விழா :

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி(Senthil Balaji) 5 முறை வெற்றி பெற்ற தொகுதி கரூர். தமிழக வெற்றிக் கழக மாநாட்டு கூட்டத்தை(TVK Manadu) விஞ்சும் வகையில், திமுகவின் கோட்டை என்று கூறப்படும் கரூரில் முப்பெரும் மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், செந்தில் பாலாஜியை "மேற்கு மண்டலத்தின் எதிரிகளுக்கு சிம்ம சொப்பானம்" என்று பாராட்டினார். "கோடு போட சொன்னால் ரோடு போட்டிருக்கிறார்" எனவும் புகழ்ந்தார்.

கரூரில் நாளை விஜய் பிரசாரம் :

இந்நிலையில் தவெக தலைவர் விஜய் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை(TVK Vijay Campaign Schedule in Karur) தீவிரப்படுத்தி வரும் நிலையில், கரூரில் நாளை பெரிய அளவிலான பொதுக்கூட்டத்தை நடத்த இருக்கிறார். இது செந்தில் பாலாஜிக்கு நேரடி சவால் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

விஜய்க்கு வரும் கூட்டம் வேறு லெவலில் இருக்கும் என்றும், இது திமுக மாநாட்டை விஞ்சும் என்றும், தவெக தொண்டர்கள் தெரிவிக்கின்றனர். "செந்தில் பாலாஜியின் கோட்டையை உடைக்கிறோம்" என்ற முழக்கமும் தவெகவில் எழுந்துள்ளது.

பலத்தை காட்ட விஜய் தீவிரம் :

முதலில் திட்டமிட்டபடி, கரூரில் விஜய் பிரசாரம்(Vijay Campaign) டிசம்பர் மாதம் நடக்க வேண்டியது. ஆனால் திமுகவிற்கு சவால் விடுக்கும் விதமாக பிரசார திட்டத்தை மாற்றிய அவர் முப்பெரும் விழா நடந்த 10 நாட்களில் கரூரில் தனது பலத்தை காட்ட இருக்கிறார். திமுகவுக்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், விஜய் எந்த செலவும் பண்ணாமல், தனது பலத்தை நாளை நிரூபிப்பார் என்கின்றனர் தவெக நிர்வாகிகள்.

மேலும் படிக்க : TVK: "அடக்குமுறை விளையாட்டு வேண்டாம்" : திமுக அரசை எச்சரித்த விஜய்

செந்தில் பாலாஜியை விமர்சிப்பாரா விஜய்? :

இந்தக் கூட்டத்தில், ‘‘கரூர் நகராட்சி சீரழிவு, செந்தில் பாலாஜி மீதான காவிரி ஆற்றில் மணல் கொள்ளை, டாஸ்மாக் மது விற்பனை ஊழல் ஆகியவற்றை மையமாக வைத்து விஜய் பேசலாம் எனக் கூறப்படுகிறது. ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது செந்தில் பாலாஜியை ஊழல்வாதி என்று விமர்சித்து, பின்னர் அவரை அமைச்சராக்கி, புகழ்ந்து தள்ளியதையும் விஜய் காட்டமாக விமர்சிப்பார் எனக் கூறப்படுகிறது.

விஜயின் கூட்டத்திற்கு ஆள் வராமல் தடுப்பதற்காக செந்தில் பாலாஜி அப்பகுதியில் உள்ளவர்களுக்கு காசு கொடுத்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

=============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in