திரையுலகில் 50 ஆண்டுகள் :
Rajini Coolie Movie Release in Krishnaveni Theatre : தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்பதை விட, இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இவர் சினிமாவில் கால்பதித்து 50 ஆண்டுகள் ஆகி விட்டது. 50வது ஆண்டில் அவர் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
15-08-1975 - அபூர்வ ராகங்கள் :
ரஜினி நடித்த முதல் படமான 'அபூர்வ ராகங்கள்'(Apoorva Raagangal Release Date) ஆகஸ்ட் 15, 1975 அன்று வெளிவந்தது. சரியாக 50 வருடம் முடியும் நாளன்று 'கூலி' படம் வெளியாக(Coolie Movie Release Date) இருக்கிறது. 'அபூர்வ ராகங்கள்' படம் சென்னையில் மிட்லேண்ட், அகஸ்தியா, ராக்ஸி, கிருஷ்ணவேணி ஆகிய தியேட்டர்களில் ரிலீசானது. இவற்றில் தற்போது கிருஷ்ணவேணி தியேட்டர் மட்டுமே இருக்கிறது. மற்றவை மூடப்பட்டு விட்டன.
கிருஷ்ணவேணி தியேட்டர் :
சென்னை நகரின் அடையாளங்களில் ஒன்றான தியாகராய நகர் பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ளது தான் கிருஷ்ணவேணி தியேட்டர்(Krishnaveni Theatre Chennai). சென்னை பேச்சிலராக வேலை தேடி வருபவர்களில் யாரும் இந்த தியேட்டருக்கு செல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. இத்தனை வருடங்களாக அந்த தியேட்டர் இருந்து வந்தாலும் இந்திய சினிமாவின் முக்கிய நடிகரான ரஜினியின் முதல் மற்றும் ஐம்பதாவது வருடப் படங்களும் வெளியாவது கூடுதல் சிறப்பு.
மகிழ்ச்சியில் ரஜினி ரசிகர்கள் :
ரஜினியின் அபூர்வ ராகங்கள் தொடங்கி கூலி வரை 50 ஆண்டுகள் ரசிகர்களின் மனதோடு ஒன்றிப் போய் இருக்கிறது கிருஷ்ணவேணி திரையரங்கம்(Krishnaveni Theater). அபூர்வ ராகங்கள் வெளியான அதே கிருஷ்ணவேணி சினிமாஸ், 'கூலி' திரைப்படத்தையும் திரையிடுவது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
மேலும் படிக்க : டிக்கெட் முன்பதிவு மூலம் 2 மில்லியன் டாலர்கள் : சாதித்த ’கூலி’
ரஜினியோடு பயணிக்கும் கிருஸ்ணவேணி :
165-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இன்றும் இந்திய சினிமாவின் வசூல் மன்னனாகத் திகழும் ரஜினிகாந்தின் திரைப் பயணத்துடன் இணைந்து வந்த ஒரே திரையரங்கம் என்ற பெருமை, தியாகராய நகர் கிருஷ்ணவேணி தியேட்டரையே(T Nagar Krishnaveni Theatre) சாரும்.
-====