டிக்கெட் முன்பதிவு மூலம் 2 மில்லியன் டாலர்கள் : சாதித்த ’கூலி’

Coolie Movie Pre Booking Ticket Collection in North America : வட அமெரிக்காவில் டிக்கெட் முன்பதிவில் 2 மில்லியன் டாலர்கள் வசூல் செய்த முதல் தமிழ் படம் என்கிற சாதனை படைத்திருக்கிறது கூலி.
Actor Rajinikanths Coolie Movie Pre Booking Ticket Collection in North America
Actor Rajinikanths Coolie Movie Pre Booking Ticket Collection in North America
1 min read

சாதனையை முறியடித்த ’கூலி’ :

Coolie Movie Pre Booking Ticket Collection in North America : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தேவாவாக மிரட்டியிருக்கும் படம்தான் கூலி. ஐரோப்பாவில் ஆகஸ்டு 13ம் தேதியும், இந்தியாவில் ஆகஸ்டு 14ம் தேதியும் கூலி ரிலீசாகிறது. இந்தநிலையில், முன்பதிவில் வட அமெரிக்காவில் ரெக்கார்டு பிரேக் செய்திருக்கிறது கூலி.

வட அமெரிக்காவில் சாதித்த ‘ கூலி’ :

டிக்கெட் முன்பதிவில்(Coolie Ticket Booking Collection) வட அமெரிக்காவில் 2 மில்லியன் டாலர்கள் அதாவது ரூ. 17 கோடியே 52 லட்சத்து 88 ஆயிரத்து 525 வசூல் செய்திருக்கிறது. வட அமெரிக்காவில் இது வரை எந்த தமிழ் படமும் டிக்கெட் முன்பதிவில் 2 மில்லியன் டாலர்களை குவித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி ரெக்கார்ட் பிரேக்கர் தான் :

ரஜினிகாந்த் ஒரு ரெக்கார்ட் மேக்கர் மட்டுமல்ல, ரெக்கார்ட் பிரேக்கரும் என்பதை கூலி படம்(Coolie Movie) நிரூபித்து இருக்கிறது. அமெரிக்காவில் கூலி படத்திற்கான டிக்கெட் கிடைப்பது கடினமாக உள்ளது. கூலி படம் ஓடவிருக்கும் தியேட்டர்களில் முதல் 5 நாட்களுக்கு டிக்கெட் இல்லை என்கிறார்கள். இதேபோன்று ஆன் லைன் முன்பதிவிலும் புதிய சாதனையை படைத்து இருக்கிறது ’கூலி’

லோகேஷ் கனகராஜ் இயக்கம் :

லோகேஷ் கனகராஜ்(Lokesh Kanagaraj) இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்(Actor Rajinikanth) நடித்து இருக்கும் திரைப்படம் தான் 'கூலி'. இதன் டிரெய்லரில் ரஜினிகாந்தின் சில அற்புதமான ஸ்டைல் மற்றும் மாஸ் ஆக்‌ஷன் காட்சிகள் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்தது. இந்த முறை, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நட்சத்திர சக்தியை விட கதையில் அதிக கவனம் செலுத்தியதாகத் தெரிகிறது.

மேலும் படிக்க : Coolie : ‘லியோ’ சாதனையை முறியடித்த ‘கூலி’ : முன்பதிவில் அசத்தல்

இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த்(Coolie Movie Casting) உடன் நாகார்ஜூனா, அமீர்கான், உபேந்திரா, சோபின் சாஹிர், சுருதிஹாசன், சத்யராஜ் என பெரும் நட்சத்திர பட்டாளங்கள் இணைந்திருப்பதால், படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

====================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in