நண்பர்கள் தாக்கியதில் எஸ்ஐ பலி :
Edappadi Palanisamy Slams DMK Govt : புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக 54 வயதான ராஜாராமன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 18 ஆம் தேதி இரவு 8 மணியளவில் எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் 'வீடியோ கேம்' விளையாடி கொண்டிருந்துள்ளார். உடன் இருந்த நண்பர்கள் மதுபோதையில் இருந்துள்ளனர்.
ராஜாராமன் கிளம்ப தயாரான நிலையில், அவருடன் தகராறில் ஈடுபட்ட நண்பர்கள், ஒரு கட்டத்தில் அவரை கீழே தள்ளினர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், ராஜாராமன் மயக்கம் அடைய, அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், இன்று காலை மரணம்(SI Rajaraman Death) அடைந்தார். இது தொடர்பாக ராஜாராமனின் நண்பர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திமுக அரசுக்கு கேள்வி? :
இந்தச் சம்பவம் குறித்து, எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி(EPS) எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளதாவது, "சென்னை எழும்பூரில் தாக்குதலுக்கு ஆளாகிய ஆயுதப்படை எஸ்.ஐ. ராஜராஜன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சம்பவத்தன்று நள்ளிரவில் மர்ம நபர்களால் எஸ்.ஐ. ராஜராஜன் அவர்கள் தாக்கப்பட்டதாக செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், புனைவு FIRகளுக்கு பெயர்போன திமுக அரசு, அஜித்குமார் வழக்கு போலவே இந்த வழக்கிற்கு என்ன கதை எழுதியுள்ளது என தெரியவில்லை.
உதவி ஆய்வாளருக்கே பாதுகாப்பில்லை :
ஆனால், ஒரு காவல்துறை உதவி ஆய்வாளர் தாக்குதலுக்கு ஆளாகி, உயிரிழந்துள்ளது என்பது திமுக ஆட்சியின் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை(Police Security) என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதை மீண்டும் மெய்ப்பிக்கிறது. காவல்துறையினர் தாக்கப்படுவது, ராஜினாமா செய்வது, காவல்துறை சீர்கேடுகள் குறித்து போதுவெளியிலேயே தெரிவிப்பது என தொடர்ந்து வரும் செய்திகள் உணர்த்துவது ஒன்றைத் தான்- காவல்துறையை நிர்வகிக்க முடியாத முதல்வராக இருக்கிறார் ஸ்டாலின்.
நேர்மையான விசாரணை அவசியம் :
எஸ்.ஐ. ராஜராஜன் கொலை(SI Rajaraman Murder) வழக்கில் நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" இவ்வாறு எடப்பாடி பழனிசாமி(Edappadi Palanisamy) கேட்டுக் கொண்டுள்ளார்.