அஜித்குமார் குடும்பத்துக்கு இழப்பீடு : 25 லட்சம் வழங்க உத்தரவு

Sivagangai Ajith Kumar Case : காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த மடப்புரம் அஜித்குமார் குடும்பத்துக்கு கூடுதல் இழப்பீடாக, 25 லட்சம் வழங்க வேண்டும் என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
Madurai HC on Sivagangai Ajith Kumar Custody Death Case Compensation
Madurai HC on Sivagangai Ajith Kumar Custody Death Case Compensation
1 min read

காவலாளி அஜித்குமார் மரணம் :

Madurai HC on Sivagangai Ajith Kumar Case : சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் காவல்நிலைய விசாரணையில் மரணமடைந்தார். காவலர்கள் அவரை அடித்த காணொளி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகள், பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட வழக்கை, சிபிஐ விசாரணை நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

விசாரணை அறிக்கை தாக்கல் :

அஜித்குமார் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை(Madurai High Court) தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் கடும் கண்டனம் தெரிவித்தது. நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளும் மக்களிடையே பேசுபொருளாகின. இதனிடையே, மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி, தனது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்நிலையில் அஜித்குமார் உயிரிழந்தது தொடர்பான வழக்கு(Ajith Kumar Death Case), உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மேலும் படிக்க : அஜித் மரணம், டிஜிபிக்கு நோட்டீஸ் : மனித உரிமைகள் ஆணையம் அதிரடி

அப்போது நீதிபதிகள் உத்தரவுகளை பிறப்பித்தனர். அதன் விவரம் வருமாறு...

நீதிமன்றம் அதிரடி உத்தரவு :

* முக்கிய சாட்சிகளுக்கு பாதுகாப்பு கோரி சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது ஏழு நாட்களில் முடிவெடுக்க வேண்டும்.

* பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு வழங்கிய 7.5 லட்சம் இடைக்கால இழப்பீடு போதுமானதாக இல்லை. எனவே, கூடுதலாக ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும்.

* விசாரணையில் காயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து சிவகங்கை மாவட்ட நீதிமன்றம்(Sivagangai District Court) முடிவு செய்து அரசுக்கு உரிய பரிந்துரையை செய்ய வேண்டும்.

இவ்வாறு தனது உத்தரவில் உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை பரிந்து செய்துள்ளது.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in