ADMK Chief Edappadi Palaniswami About TVK Vijay Campaign Crowd Stampede Death in Karur 
தமிழ்நாடு

Karur Tragedy : ’இத்தனை உயிர்கள் பறிபோனதே’: வேதனை, அரசுக்கு கேள்வி

EPS on Karur Tragedy Death : இந்தியாவில் அரசியல் கட்சிகள் நடத்திய பொதுக் கூட்டங்களில் கூட இவ்வளவு உயிர்கள் பறிபோனது கிடையாது என்று, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேதனை தெரிவித்துள்ளார்.

Kannan

எடப்பாடி பழனிசாமி ஆறுதல் :

EPS on Karur Tragedy Death : கரூரில் தவெக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 10 குழந்தைகள், 13 பெண்கள் அடங்குவர்.

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி(EPS on Karur Incident) அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து பேசினார்.

ஒருதலைப்பட்சமான அரசு :

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ”தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே அரசியல் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் இவ்வளவு உயிர்கள் பறிபோனது. அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக நடக்கிறது. போலீசார் முழுமையாக பாதுகாப்பு அளிக்கவில்லை.

அரசின் அலட்சியமே காரணம் :

சென்னை நடைபெற்ற விமானப்படை வான்சாகச நிகழ்ச்சியிலும், பாதுகாப்பு வழங்காததால் தான் 5 பேர் இறந்தனர்(EPS on Air Show Death). இதில் பாடம் கற்காத ஸ்டாலினின் அலட்சியத்தால் மற்றொரு பெருந்துயரம் நடந்துள்ளது. பொதுக்கூட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

போலீசார் பாதுகாப்பு கொடுக்கவில்லை :

மின் இணைப்பு துண்டிப்பால் கூட்ட நெரிசல்(Karur Stampede Death), தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அரசும், போலீசாரும் முழுமையான பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். கரூரில் நடந்த பெருந்துயரத்திற்குக் போலீசாரின் முறையற்ற பாதுகாப்புக் குறைபாடுதான் காரணம்(Karur Stampede Reason).

எதிர்க்கட்சி கூட்டங்களுக்கு பாதுகாப்பு இல்லை :

முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதது செய்திகளை பார்த்தால் தெரிகிறது. எனது பிரசாரத்தில் கூட போலீசார் முறையான(Police Security in Campaign) பாதுகாப்பு அளிக்கவில்லை. ஆளுங்கட்சி நிகழ்ச்சி நடந்தால் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அரசும் போலீசுல் ஒருதலைப் பட்சமாக செயல்படுகிறது.

நேரம் கடந்து கூட்டம் நடத்தக் கூடாது :

எந்த கட்சி என்று பாராமல் போலீசார் நடுநிலையாக செயல்பட வேண்டும். முழுமையான பாதுகாப்பு வழங்கியிருந்தால் உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம். அறிவித்த நேரத்தில் கூட்டம் நடத்தாமல் பல மணி நேரம் தாமதமாக வந்து கூட்டம் நடத்துகிறார்கள். குறிப்பிட்டு விட்டு பலமணி நேரம் கழித்து வருவது ஏற்கத்தக்கது அல்ல.

விஜயும் நிலைமை உணர்ந்து செயல்படவில்லை :

அரசியல் கட்சி தலைவரும் நிலைமையை கூர்ந்து கவனித்து ஆலோசித்து செயல்பட்டிருக்க வேண்டும்(EPS on Vijay Karur Campaign). அரசியல் கட்சி கூட்டம் நடத்தினால் கட்சி, போலீசார், அரசை நம்பி தான் மக்கள் பங்கேற்கிறார்கள். கூட்டத்துக்கு ஏற்றவாறு அரசியல் கட்சியினரும் ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க : Karur : கரூரில் நடந்த துயரம்..! உண்மையில் பலி எண்ணிக்கை எத்தனை?

அனுபவம் மிக்க அரசியல் கட்சித் தலைவர்களை மற்ற கட்சித் தலைவர்களும் பின்பற்ற வேண்டும். அனுபவமுள்ள கட்சிகளின் கூட்டங்களை பார்த்து புதிய கட்சிகள் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து இருக்கிறது. விசாரணை முடிவு வரை காத்திருப்போம். தேவையின்றி இதில் அரசியல் செய்ய விரும்பவில்லை” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி(Edappadi Palanisamy on Karur Death) பேட்டியளித்தார்.

===============