எடப்பாடி பழனிசாமி பிரசாரம் :
Edappadi Palaniswami Criticized DMK Government : ’மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் மாவட்டம் வாரியாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்டுள்ள அவர், கூடலூரில் பொதுமக்களிடையே உரையாற்றினார். ”உயர்கல்வி படிப்பதில் தமிழ்நாடு முதலிடம் என்று பெயர் பெற்றுத் தந்தது அதிமுக அரசுதான். அந்தத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கியது அதிமுக தான் என்று கூறினார்.
மருத்துவ கல்லூரிகளை திமுக கொண்டு வரவில்லை :
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இதுவரை ஒரு மருத்துவக் கல்லூரி கூடக் கொண்டு வர முடியவில்லை. ஜெயலலிதா இருந்த பொழுது ஆறு மருத்துவக் கல்லூரிகளைத் தமிழகத்திற்காகக் கொண்டு வந்தார். முழுக்க முழுக்க மாநிலங்களின் நிதியைக் கொண்டு மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைத்தார்.
ஊழலின் முன்மாதிரி திமுக ஆட்சி :
நாட்டிலேயே முன்மாதிரியாக இருக்கக்கூடிய ஆட்சி திமுக ஆட்சி தான் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்(EPS on DMK). அப்படி தான் இருக்கிறது. அதிகக் கடன் வாங்குவதில் முன்மாதிரி ஆட்சி. ஊழல், கமிஷன் கரப்ஷன் உள்ளிட்டவற்றின் முன்மாதிரியாக திமுக தான். அதேபோல் டாஸ்மாக் பத்து ரூபாய் கூடுதலாக வாங்குவது முன்மாதிரியாக திமுக தான் குடும்ப ஆட்சி , வாரிசு அரசியல் அவர்களுக்கு முன்மாதிரியாக திமுக தான், பொய் வாக்குறுதி அளிப்பது திமுக தான் முன்மாதிரியாக என்று சரமாரியாக எடப்பாடி விமர்சித்தார். .
காற்றில் பறந்த 525 வாக்குறுதிகள் :
தேர்தலுக்கு முன் 525 வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் கொடுத்திருந்தார். அதில் 98 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாகப் பொய் வாக்குறுதி அறிக்கை அளிப்பதில் திமுக அரசு முன்மாதிரியாக இருக்கிறது. அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டித் திறப்பு விழா நடத்துகிறது.
குடும்ப ஆட்சி நடத்தும் திமுக :
திமுக அரசு குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது தலைவராக ஸ்டாலினும் துணை முதல்வராக ஸ்டாலினும், எம்பி கனிமொழி மக்களவையில் தலைவராகவும், இன்பநதி மாநிலச் செயலாளராகவும் உள்ளார். முக்கிய பொறுப்புகளில் அவரது குடும்ப உறுப்பினர்களை உள்ளனர். ஆட்சி அதிகாரத்திற்கு கருணாநிதி குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே இன்றைக்கு வர முடியும். நாட்டு மக்கள் யாரும் திமுக அரசை புகழ்ந்து பேசவில்லை அவரது குடும்ப உறுப்பினர்களே புகழ்ந்து பேசுவதாகக் கூறினார். அப்படிப்பட்ட கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா என்று பொதுமக்களைப் பார்த்து கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க : ”அதிமுக விவகாரங்களில் அமித் ஷா தலையீடு கிடையாது” : EPS திட்டவட்டம்
பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தவறா? :
அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்ததில் தவறு. வாஜ்பாய் ஆட்சி காலத்தில் நீங்கள் கூட்டணி வைத்தால் நல்லது. அதிமுக கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா என்று கேள்வி எழுப்பினார். அதிமுக- பாஜக கூட்டணியை பார்த்து திமுகவிற்கு பயம் வந்து விட்டதாக” பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார்.
==================