
அமித் ஷாவுடன் எடப்பாடி சந்திப்பு :
ADMK Edappadi Palanisamy Meets Amit Shah : டெல்லி சென்றிருந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். பின்னர் வெளியே வந்த அவர் கைக்குட்டையால் முகத்தை மூடி சென்றதாக, விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. தமிழகத்தில் இது பேசுபொருளான நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் எடப்பாடி பழனிச்சாமி(EPS in Salem), தனது டெல்லி பயணம் குறித்து விவரித்தார்.
திமுகவின் இரட்டை நிலைப்பாடு :
153 சட்டமன்ற தொகுதிகளில் நேரடியாக மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தேன்(EPS Campaign). மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. திமுக அரசு அகற்றுவதில் மக்கள் ஆர்வமாக உள்ளனர். திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது பல்வேறு நிலைபாடு.
முகம் துடைப்பதை விமர்சிப்பதா? :
காரில் செல்லும் போது முகத்தை துடைப்பது சாதாரண விஷயம், இதையெல்லாம் பெரிதுபடுத்தி, திரித்து செய்தி வெளியிடுவது ஊடக தர்மமா ? முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் இமை அளவு கூட எனக்கு கிடையாது. உள்துறை அமைச்சருடனான சந்திப்பு(EPS Meet Amit Shah) குறித்து அனைத்து விவரங்களும் முன்கூட்டியே தெரியப்படுத்தி விட்டுதான் சென்றேன்.
அதிமுக விவகாரம் - அமித் ஷா தலையிட மாட்டார் :
மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து தேசத்துக்காக பாடுபட்ட தலைவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என மனு வழங்கினேன். அமித்ஷா இவரை அழைத்து பேசினார், அவரை அழைத்து பேசினார். என கூறப்படும் செய்திகளை தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். அதிமுக விவகாரங்களில் நுழைய மாட்டேன் என்று அவர் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறார். அவர் யாரையும் அழைக்கவில்லை
கட்சிக் கட்டுப்பாட்டை மீறினால் நடவடிக்கை :
அவரும் சொல்லிவிட்டார், நானும் சொல்லிவிட்டேன், இதோடு முடிந்து விட்டது. கட்சி கட்டுப்பாட்டை மீறி சிலர் செயல்படுகிறார்கள். அப்படி செய்தால் அவர்கள் மீது தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும். டிடிவி என் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். பசும்பொன் முத்துராமலிங்கத்திற்கு பாரத ரத்னா விருது(Bharat Ratna Award for Muthuramalinga Thevar) கொடுக்க வேண்டும் என கூறிய பிறகு தான் டிடிவி தினகரன் இதுபோல் உள்நோக்கத்துடன் பேசி வருகிறார்.
மேலும் படிக்க : ஆட்சியை காப்பாற்றியது ”122 அதிமுக MLAக்கள்”: EPSக்கு தினகரன் பாடம்
ஸ்டாலின் வெளிநாட்டிற்கு செல்லும் போது இப்படித்தான் கேள்வி கேட்டீர்களா? விவசாயி ஒரு கட்சியின் பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஆக இருந்தால் என்னென்ன இன்னலை சந்திப்பது என்பதற்கு நானே உதாரணம்” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.
=======