EPS Condemns DMK on Chennai Women Deepa Drown To Death  
தமிழ்நாடு

Woman Death : அவல ஆட்சியால் என்ன பயன்? : எடப்பாடி பழனிசாமி காட்டம்

EPS Condemns DMK on Women Death : சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பலியான பெண் குடும்பத்திற்கு தமிழக அரசு என்ன பதில் சொல்கிறது? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

Kannan

EPS Condemns DMK on Women Death in Chennai : சென்னை சூளைமேடு பகுதியில் மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தீபா என்ற பெண்மணி உயிரிழந்தார். மழைநீர் பள்ளம் குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் உயிரிழப்பு :

இந்தநிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,“

சென்னை சூளைமேடு பகுதியில் நேற்றைய தினம், மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தீபா என்ற பெண் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மூடப்படாமல் இருந்த மழைநீர் பணி பள்ளத்தை பல மாதங்களாக முடூவதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், அக்கறையற்று நடவடிக்கை எடுக்காமல் இருந்த காரணத்தினால் இந்த உயிர் பலி நடந்திருந்திருக்கிறது.

உடற்கூராய்வு அறிக்கை - அதிர்ச்சி தகவல் :

உயிரிழந்த பெண்ணின் உடற்கூராய்வு அறிக்கையில், சுமார் அரை மணி நேரம் அவர் உயிருக்கு போராடியதாக வரும் தகவல்கள் பதை பதைக்க வைக்கின்றன. மழைநீர் வடிகால் பணிகள், 95%, 97% முடிவடைந்து விட்டன என்று நான்கரை ஆண்டுகளாக சதவீதக் கணக்கு போட்ட பொம்மை முதல்வர் அரசின் அமைச்சர்களும், சென்னை மேயரும் இந்த உயிரிழப்புக்கு சொல்லப்போகும் பதில் என்ன?

பணிகள் முடியவில்லை, மழைநீரும் வடியவில்லை :

ஆண்டுதோறும் நடக்கும் இது போன்ற மரணங்களை ஒருபோதும் ஏற்கமுடியாது. இதெல்லாம் எந்த பேக்கேஜில் வரும் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்வாரா? மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை; மழைநீரும் வடிந்த பாடில்லை. இப்படிப்பட்ட ஒரு அவல ஆட்சி இருந்து என்ன பயன்?

மேலும் படிக்க : EPS : ’உங்களுடன் ஸ்டாலின்’ வெறும் கண்துடைப்பு : எடப்பாடி பாய்ச்சல்

தீபா உயிரிழப்புக்கு அரசே பொறுப்பு :

தீபா உயிரிழப்புக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் இந்த அரசு உடனடியாக வழங்கவேண்டும். மழைநீர் வடிகால் பணிகளை இனியாவது பாதுகாப்பு நெறிமுறைகளையோடு மேற்கொள்ள வேண்டும்”

இவ்வாறு அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி(EPS Tweet) கேட்டுக் கொண்டுள்ளார்.

==============