
உங்களுடன் ஸ்டாலின் முகாம் :
Edappadi Palanisamy on Ungaludan Stalin Scheme : தமிழகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் மக்கள் அளிக்கும் மனுக்கள் பெறப்பட்டு, அவற்றுக்கு தீர்வு காணப்படும் என்று திமுக அரசு உறுதியளித்து இருக்கிறது. இதனை, நம்பி முகாம்களுக்கு செல்லும் மக்கள், பல மணி நேரம் காத்திருந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்து விட்டு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்துக் கிடக்கின்றனர்.
தண்ணீரில் மிதந்த கோரிக்கை மனுக்கள் :
இந்தநிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை ஆற்றில்(Ungaludan Stalin Petition in Vaigai River) மூட்டை மூட்டையாக கோரிக்கை மனுக்கள் வீசப்பட்டு கிடந்தன. தண்ணீர் மிதந்த மனுக்களை பார்த்து, அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகளை ஆற்றில் கிடந்த மனுக்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.
பெட்டி இருக்கு, சாவியை காணவில்லை :
இதுபற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி(Edappadi Palanisamy), ” எதிர்க்கட்சியாக இருந்த போது ஊர் ஊராக சென்று பொதுமக்களிடமிருந்து வாங்கிய மனுக்கள், கருப்பு பெட்டிகளில் இன்னும் பூட்டப்பட்டுள்ளது, சாவியை காணவில்லை.
நீட் ஒழிப்பு வாக்குறுதி என்னவானது? :
நீட் ஒழிப்பு வாக்குறுதி கொடுத்து ஆளுங்கட்சியான பிறகு கூட வெற்று நீட் ஒழிப்பு மாநாடு நடத்தி மாணவர்களிடம் வாங்கிய கையெழுத்து படிவங்களை கூட காற்றில் பறக்க விடப்பட்டு குப்பையாக்கப்பட்டது.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் :
இந்தநிலையில், உங்களுடன் ஸ்டாலின்(Ungaludan Stalin) என்ற பெயரில் விடியா திமுக அரசு விளம்பரத்திற்காக ஆரம்பித்த திட்டத்தின் மனுக்கள் இன்று அஸ்தியை கரைப்பது போல, திருப்புவனம் வைகையாற்றில் மீண்டும் குப்பை ஆக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்கு உரியது.
மேலும் படிக்க : வைகையில் 'உங்களுடன் ஸ்டாலின்' கோரிக்கை மனுக்கள் : மக்கள் அதிர்ச்சி
மக்களை ஏமாற்ற திமுக நாடகம் :
மக்களின் வலிகளை, உணர்வுகளை, வேதனைகளை புரிந்து கொள்ள இயலாமல் , அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது போல் நாடகமாடி , உங்களுடன் ஸ்டாலின் என்ற கண்துடைப்பு நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்த இந்த விடியா அரசிற்கு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” இவ்வாறு அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.
==================