Rajendra Balaji Invites TVK Vijay for ADMK Alliance 
தமிழ்நாடு

திமுகவை வீழ்த்த "அதிமுக கூட்டணிக்கு வாங்க” : விஜய்க்கு அழைப்பு

Rajendra Balaji Invites TVK Vijay for ADMK Alliance : திமுகவை உண்மையாக எதிர்க்க விரும்பினால், அதிமுக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும் என்று, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அழைப்பு விடுத்துள்ளார்.

Kannan

தீவிர அரசியலில் விஜய் :

Rajendra Balaji Invites TVK Vijay for ADMK Alliance : கட்சி தொடங்கிய ஓராண்டில், இரண்டு மாநாடுகள், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் என பிசியாக இருக்கும் விஜய், தமிழகத்தில் திமுகவையும், மத்தியில் பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். தவெக தலைமையில் தான் கூட்டணி என்பது அவரது நிலைப்பாடாக உள்ளது. இதை பொதுமக்களிடையே பேசும் போது அவர் கூறி வருகிறார். தேர்தலுக்கு 7 மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி நிலைப்பாடு மாறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

அதிமுகவை ஜெயிக்க முடியாது :

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி(Rajendra Balaji ADMK), 2026 தேர்தலில் திமுக - அதிமுக இடையேதான் போட்டி என்றார். திமுகவும் தமிழக வெற்றிக் கழகம் தான் 2வது இடத்திற்கு போட்டி.அதிமுகவை எதிர்க்கும் சக்தி யாருக்கும் கிடையாது.

தனித்து நின்றால் வெற்றி கிடைக்காது :

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தனித்து நின்று ஜெயிப்போம் என்று கூறுவது, இந்த காலத்தில் மட்டுமல்ல; எந்த காலத்திலும் நடக்காத ஆசை. அவர் முயற்சி எல்லாம் வீணாகும்.

எழும் படிக்க : TVK Vijay : குலுங்கியது திருச்சி : தொண்டர்கள் வெள்ளத்தில் விஜய்

அதிமுக கூட்டணிக்கு வரவேண்டும் :

விஜய் உண்மையிலேயே திமுகவை எதிர்க்க வேண்டும், ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற முனைப்புடன் இருந்தால், அதிமுக கூட்டணிக்கு(ADMK TVK Alliance) வருவதுதான் சிறந்தது. தனித்து நின்றால், இந்த தேர்தலோடு விஜய் கட்சியை திமுக அழித்து விடும். இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டு அவர் செயல்பட்டால் நல்லது” இவ்வாறு ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

================