Anna University Former VC Balagurusamy Request To CM MK Stalin on Higher Education 
தமிழ்நாடு

உயர்கல்வியை சீரமைக்க நடவடிக்கை : அரசுக்கு பாலகுருசாமி வேண்டுகோள்

Former VC Balagurusamy Request To CM MK Stalin : தமிழகத்தில் உயர் கல்வியை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கு வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு, பாலகுருசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Kannan

பல்கலைகளுக்கு நெருக்கடியான சவால்கள்

Former VC Balagurusamy Request To CM MK Stalin : அண்ணா பல்​கலைக்​கழக முன்​னாள் துணை வேந்​தரும், மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் முன்​னாள் உறுப்​பினரு​மான பால​குரு​சாமி முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்​பி​யுள்ள மனு​வில், ” தமிழக பல்​கலைக்​கழகங்​கள் நெருக்​கடிமிக்க சவால்​களை எதிர்​கொண்டு வரு​கின்​றன. அதற்கு விரைந்து தீர்வு காணா​விட்​டால், உயர்​கல்வி நிறு​வனங்​களின் தரம், தன்​னாட்சி அந்​தஸ்​து, உலகளா​விய போட்​டித் திறன் அனைத்​தும் பாதிக்​கப்​படும்.

தேசிய கல்விக் கொள்கை அவசியம்தான் :

தமிழக பல்​கலைக்​கழகங்​களில் தேசிய கல்விக் கொள்​கையை அமல்​படுத்​து​வ​தில் புரிதலும், சரி​யான தெளி​வும் இல்​லை. தேசிய கல்விக் கொள்​கைக்கு(National Education Policy) மாற்​றாக, அதன் இலக்​கு​களை அடை​யத்​தக்க வகையி​லான மாற்று கல்விக் கொள்​கை​யும் இது​வரை செயல்​படுத்​தப்​பட​வில்​லை. இந்த விஷ​யத்​தில் கொள்கை முடிவு எடுக்க முடி​யாமல் இருந்​தால், அது மாநில பல்​கலைக்​கழகங்​களில் குழப்​பத்தை உண்டாக்கும். தமிழ கத்​தின் சமூக, பொருளா​தார, மொழி சூழலுக்கு ஏற்ப தேசிய கல்விக் கொள்கை இலக்​கு​களை அடைவதற்கான ஒரு தெளி​வான செயல் திட்​டத்தை உரு​வாக்க வேண்​டியது அவசர, அவசி​யம்.

காலி பணியிடங்களை நிரப்புக :

தமிழகத்​தில் பெரும்​பாலான பல்​கலைக்​கழகங்​களில் துணை வேந்​தர்​கள்(Vice Chancellor), நிரந்தர பதி​வாளர்​கள், தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர்கள், கணக்கு அலு​வலர்​கள் இல்​லை. சரி​யான தலைமை இல்​லா​விட்​டால், பல்​கலைக்​கழகம் சரி​யாக செயல்பட முடி​யாது. பல ஆண்​டு​களாக பணி நியமனம் இல்​லாத​தால், ஆசிரியர் பணி​யிடங்​களும் காலி​யாக உள்​ளன. தற்​காலிக முறை​யில் நியமித்தால், கற்​பித்​தல், ஆராய்ச்சி பணி சரி​யாக இருக்​காது.

நிர்வாகத்தில் அிதிகாரிகள் தலையீடு :

இதனால், மாணவர்​கள் பெரிதும் பாதிக்​கப்​படு​வார்​கள். ஆசிரியர்​கள், அலு​வலர்​களுக்கு ஊதி​யம் வழங்க முடி​யாத அளவுக்கு பல்கலைக்​கழகங்​கள் நிதி நெருக்​கடி​யில் சிக்​கி​யுள்​ளன. அரசு அதி​காரி​களின் அளவுக்கு மீறிய தலை​யீடு, பல்​கலைக்​கழக நிர்வாகத்​தை​யும், அதன் தன்​னாட்சி அந்​தஸ்​தை​யும் பாதிக்​கும். இன்​றைய கல்​வி, வேலைவாய்ப்பு சூழலுக்கு ஏற்ப பாடத் திட்​டங்​கள் மாற்றி அமைக்​கப்​பட​வில்​லை.

தமிழக பல்கலைகள் பின்தங்கல் :

ஆராய்ச்​சி, காப்​புரிமை, சர்​வ​தேச கல்வி நிறு​வனங்​களு​டன் இணைந்து செயல்​படு​வது ஆகிய​வற்​றில் தமிழக பல்​கலைக்​கழகங்​கள் பின்​தங்கி உள்​ளன. இப்​படிப்​பட்ட சூழலில், உயர்​கல்​வியை சீரமைக்க சில யோசனை​களை முன்​வைக்​கிறேன்.

மேலும் படிக்க : ’வெற்றி நாயகன் ராஜேந்திர சோழன்’ வரலாறு பேசும் கங்கை கொண்ட சோழபுரம்

தமிழக அரசுக்கு யோசனைகள் :

* உயர்​கல்​வியை மதிப்​பீடு செய்​ய​வும், சீரமைப்​புக்​கான செயல் திட்​டங்​களை பரிந்​துரைக்​க​வும் மாநில உயர்​கல்வி சீரமைப்பு செயல் குழுவை அமைக்க வேண்​டும்.

* ஆசிரியர் நியமனங்​களில் வெளிப்​படைத் தன்​மை, காலக்​கெடு​வுடன் கூடிய நியமன முறையை அறி​முகம் செய்ய வேண்​டும்.

* பல்​கலைக்​கழகங்​களின் ஆராய்ச்​சி, உள்​கட்​டமைப்பு மேம்​பாடு, தொழில்​நுட்ப வளர்ச்சிக்​கான நிதியை உயர்த்த வேண்​டும்.

* தற்​போதைய சூழலுக்கு ஏற்ற பாடத் திட்​டங்​களை உரு​வாக்​கும் வகை​யில், பல்​கலைக்​கழகங்​களும், தொழில் நிறு​வனங்​களு​டன் இணைந்து செயல்பட செய்ய வேண்​டும்.

* எனவே, உயர்​கல்​வி சீரமைப்​புக்​கு உறு​தி​யாக, தைரிய​மாக, விரைந்​து நடவடிக்​கை எடுக்​க வலி​யுறுத்​துகிறேன்​” இவ்​​வாறு அந்த மனுவில் பாலகுருசாமி கேட்டுக் கொண்டுள்ளார்​.

====