Announcement of the 'Singappenn' Special Force and the 1091 toll-free helpline.  google
தமிழ்நாடு

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை : ”1091 என்ற பிரத்யேக உதவி எண் அறிவிப்பு ” கட்டணமில்லாமல் புகார்களை தெரிவிக்கலாம்..

பெண்களின் பாதுக்காப்பை உறுதி செய்யும் வகையில் , சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை உருவாக்கப்ப்ட்டு , தனித்துவமான சீருடையானதும் வழங்கப்பட்டுள்ளது

Rohini

தேர்தல் வாக்குறுதி , பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்து

தேர்தலுக்கு முந்தைய பிரச்சாரத்தில் தமிழக வெற்றி கழக்ம் ஆட்சியை கைப்பற்றினால் பெண்கள், குழந்தைகளின் பாதுக்காப்பை உறுதி செய்யும் வகையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தது ,

அதனை நிறைவேற்றும் விதமாக தவெக ஆட்சியை கைப்பற்றி பொறுப்பேற்றவுடன் இத்திட்டத்திற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார் முதல்வர் விஜய்

1091 என்ற இலவச உதவி எண் அறிவிப்பு

பெண்களின் பாதுக்காப்பை உறுது செய்யும் சிங்கப்பெண் சிறப்பு படைக்கு 1091 என்ற கட்டணம்ல்லா உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ,

தனியாக செல்லும் போதோ அல்லது அசாம்பாவிதம் ஏதேனும் ஏற்பட்டால் இந்த உதவி எண்னை தொடர்பு கொண்டு புகார்களாஇ தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

சிங்கப்பெண் அதிரடிப்படை : பெண்களே தலைமை

இந்த சிங்கப்பெண் அதிரடிப் படை​யின் ஐ.ஜி.​யாக பவானீஸ்​வரி நியமிக்​கப்​பட்​டுள்ளார் .இந்த படை​யில் மேலும், ஒரு எஸ்​.பி. 2 டிஎஸ்​பி, மற்​றும் 4 ஆய்​வாளர்​கள் உட்பட 30-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

தனித்துவமாக தெரியும் வகையில் சீறுடை வடிவமைப்பு

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சின்னத்தில் தைரியம், வேகம், அறிவுத்திறனைப் பறைசாற்றும் வகையில் சிங்கத்தின் முகம் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சீருடை கருப்பு நிற தொப்பி. பெல்ட் கரு நீல வண்ண சட்டை, காக்கி பேண்ட் மற்றும் கருப்பு நிறத்திளாலான பெல்ட் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

மேலும் படிக்க : தவெக தேர்தல் வாக்குறுதி : ”சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை" : இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்

=====================