தவெக தேர்தல் வாக்குறுதி : ”சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை" : இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்

பெண்களின் பாதுக்காப்பை உறுதி செய்யும் விதமாக தவெக ஆட்சி அமைத்தால் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை என்ற பெண்கள் பாதுக்காப்பு படை உருவாக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் முதல்வர்
Tvk election promise: “Singappen Special Force”: Chief Minister Vijay to launch it today
Tvk election promise: “Singappen Special Force”: Chief Minister Vijay to launch it today google
1 min read

சிங்கப்பெண் சிறப்பு படை : தொடங்கி வைக்கிறார் முதல்வர்

பெண்களின் பாதுக்காப்பை உறுதி செய்யும் விதமாக தவெக அட்சி அமைத்தால் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை என்ற பெண்கள் பாதுக்காப்பு படை உருவாக்கப்படும் என்று தெரிவித்திருந்தார், அந்த வகையில் இந்த் திட்டத்தை இன்று முதல்வர் விஜய் தொடங்கி வைகிறார்

தேர்தல் வாக்குறுதி , பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்து

தேர்தலுக்கு முந்தைய பிரச்சாரத்தில் தமிழக வெற்றி கழக்ம் ஆட்சியை கைப்பற்றினால் பெண்கள், குழந்தைகளின் பாதுக்காப்பை உறுதி செய்யும் வகையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தது ,

அதனை நிறைவேற்றும் விதமாக தவெக ஆட்சியை கைப்பற்றி பொறுப்பேற்றவுடன் இத்திட்டத்திற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார் முதல்வர் விஜய்

சிங்கப்பெண் அதிரடிப்படை : பெண்களே தலைமை

இந்த சிங்கப்பெண் அதிரடிப் படை​யின் ஐ.ஜி.​யாக பவானீஸ்​வரி நியமிக்​கப்​பட்​டுள்ளார் .இந்த படை​யில் மேலும், ஒரு எஸ்​.பி. 2 டிஎஸ்​பி, மற்​றும் 4 ஆய்​வாளர்​கள் உட்பட 30-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இன்று தொடங்கும் அதிரடிப்படை தொடக்க விழா

சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை திட்​டத்தை முதல்​வர் விஜய் இன்று தொடங்கி வைக்​கிறார். சென்னை எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானத்​தில் இன்று மாலை 5 மணிக்கு நடை​பெறும் நிகழ்​வில் சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படையை முதல்​வர் விஜய் தொடங்கி வைக்க இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடந்து வருகின்றன

தனித்துவமாக தெரியும் வகையில் சீறுடை வடிவமைப்பு

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சின்னத்தில் தைரியம், வேகம், அறிவுத்திறனைப் பறைசாற்றும் வகையில் சிங்கத்தின் முகம் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சீருடை கருப்பு நிற தொப்பி. பெல்ட் கரு நீல வண்ண சட்டை, காக்கி பேண்ட் மற்றும் கருப்பு நிறத்திளாலான பெல்ட் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

logo
Thamizh Alai
www.thamizhalai.in