BJP Ex Leader Annamalai About TVK Vijay on Karur Stampede 
தமிழ்நாடு

தவெக விஜயை பாதுகாக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை - அண்ணாமலை!

BJP Annamalai About TVK Vijay on Karur Stampede : மக்களை வேண்டுமென்றே தூண்டிவிட்டு போராடும் மனநிலையை திமுக ஏற்படுத்துவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடுமையாகச் சாடியுள்ளார்.

Bala Murugan

அண்ணாமலை கருத்து :

BJP Ex Leader Annamalai About TVK Vijay on Karur Stampede : பாஜக தேசிய பொதுகுழ உறுப்பினர் அண்ணாமலை அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து அரசியல் நகர்வுகள் குறித்த அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்து வருவார். அதன்படி ஓரிரு நாட்களுக்கு முன் தமிழகத்தின் மாபெரும் சர்ச்சைக்குரிய சம்பவமாக நிகழ்ந்து வந்த கரூர் பிரச்சார இறப்பு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளையும், நிதி உதவிகளையும் வழங்கினர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மத்திய அரசு, மாநில அரசு என இருமுனைகளும் தனி அமர்வு குழு வைத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணாமலை ஆவேசம் :

தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், இந்த சம்பவம் அரங்கேறியிருப்பது குறித்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி கேட்கப்பட்டபொழுது திமுக அரசு இதற்கு பொறுப்பேற்று பதிலளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். மேலும், சில நாட்கள் கழித்து நாங்கள் தவெக மார்க்கெட்டிங் மேனேஜர் இல்லை என்றும் விஜய் அவர்களிடம் இதைப்பற்றி கேளுங்கள் என்றும் குறிப்பிட்டார். இதற்கு பாஜக மற்றும் இதர கட்சியில் உள்ளவர்கள் அவர் கூறியதை குறிப்பிட்டு ஆவேசமடைந்த அண்ணாமலை(Annamalai on Vijay) என தங்கள் கருத்துகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

கோவையில் அண்ணாமலை :

இதைத்தொடர்ந்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய பொதுகுழு உறுப்பினர் அண்ணாமலை(Annamalai about Karur Stampede Death), கரூர் விவகாரத்தில் நீதிபதியின் கருத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும், மக்களை தூண்டிவிட்டு போராடும் மனநிலையை திமுக ஏற்படுத்துகிறது என்று விமர்சித்தார். மேலும், ஆளுநரை சீண்டும் வகையில் முதலமைச்சர் செயல்படுவது நல்லதல்ல என்று கூறிய அவர், “கரூர் விவகாரத்தில் விஜய் மீது வழக்குப்பதிவு செய்தால் வழக்கு நிற்காது என்றும் அல்லு அர்ஜுன் வழக்கில் நடந்தது தான் நடக்கும் என்று அண்ணாமலை கூறினார்.

மேலும் படிக்க : Karur Case : தவெகவின் நிலைமை இதுதானா? வருத்தம் தெரிவித்த நீதிபதி!

இதைத்தொடர்ந்து பேசிய அவர், தவெக, விஜயை பாதுகாக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என்று அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.