BJP Ex Leader Annamalai Slams DMK Government on Narikuravar Community Girl Education Issue 
தமிழ்நாடு

பேச்சில் சமூக நீதி ! செயலில் எங்கே? : திமுகவை சாடிய அண்ணாமலை

Annamalai Slams DMK Government : திமுக ஆட்சியில் பேச்சில் மட்டுமே சமூக நீதி இருப்பதாகவும், செயலில் அது கிடையாது என்றும் அண்ணாமலை கடுமையாக சாடி இருக்கிறார்.

Kannan

கல்வி மறுக்கப்பட்ட நரிக்குறவர் சிறுவன் :

Annamalai Slams DMK Government : நரிக்குரவர் சமூகத்தை சேர்ந்த ஒரு பெண் கல்வி மறுக்கப்படுகிறது எனக் கூறும் வீடியோவை, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ முதல்வர் ஸ்டாலின், நீங்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட மாநில கல்விக் கொள்கையின் ஒரு பகுதியா இது? எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

நரிக்குறவர்களுக்கு மத்திய அரசு அதிகாரம் :

நரிக்குரவர் சமூகத்தை எஸ்.டி பட்டியலில்(Narikuravar Community) சேர்ப்பதன் மூலம் அவர்களுக்கு பிரதமர் மோடி அதிகாரம் அளித்தை சுட்டிக் காட்டியுள்ள அவர், திமுக அரசு அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனை பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை இல்லாததால் அரசுப் பள்ளியில் இருந்து வெளியேற்றுவதை குறிப்பிட்டுள்ளார்.

அலட்சியம் காட்டிய அதிகாரிகள் :

திருவள்ளூர் மாவட்டத்தில்(Tiruvallur) உள்ள தாசில்தார் அலுவலகம் உட்பட ஒவ்வொரு அரசு அலுவலகத்தின் கதவுகளையும் அந்த சிறுவனின் பெற்றோர் தட்டி இருக்கிறார்கள். ஆனால் அங்கிருந்த அதிகாரிகள் அலட்சியமாகவே இருந்தனர். எந்த உதவியும் செய்யவில்லை எனத் தெரிகிறது.

மேலும் படிக்க : ஜனநாயகம் பற்றி ’திமுக பேசுவதுதான் வேடிக்கை’ : அண்ணாமலை பதிலடி

பேச்சளவில் சமூக நீதி :

இதன்மூலம் திமுக அரசாங்கத்தின் கீழ், 'சமூக நீதி' என்பது பேச்சில் மட்டுமே உள்ளது, செயலில் இல்லை” என்று அந்த அறிக்கையில், அண்ணாமலை(Annamalai Statement) கூறியுள்ளார்.

===========