ஜனநாயகம் பற்றி ’திமுக பேசுவதுதான் வேடிக்கை’ : அண்ணாமலை பதிலடி

Annamalai Criticized CM MK Stalin : திருமங்கலம் பார்முலாவுக்கு பெயர்போன திமுக தலைவர் மு. க. ஸ்டாலின், ஜனநாயகம் குறித்து பேசுவது தான் வேடிக்கை என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
BJP Former Leader Annamalai Criticized CM MK Stalin on Thirumangalam Formula
BJP Former Leader Annamalai Criticized CM MK Stalin on Thirumangalam Formula
1 min read

Annamalai Criticized CM MK Stalin : வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்ததாக தேர்தல் ஆணையம் மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள முதல்வர் ஸ்டாலின், தேர்தல் ஆணையத்தை பாஜக தனது மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார்.

ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி :

இதற்கு பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை(Annamalai), ” ராகுலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு செவி சாய்ப்பதற்கு பதிலாக, அவரை போனில் தொடர்பு கொண்டு, 'வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் ஓட்டுக்களை திருடி வென்றீர்களா?' என்று கேட்கலாம்.

காங்கிரஸ் தொடர் தோல்வி :

ஓட்டுக்கள் திருடப்பட்டதாக அவர் சொல்லும் மகாரேவபுரா தொகுதியில் ஒருமுறை, இரு முறை அல்ல, காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 4 முறை தோல்வியை சந்தித்துள்ளது. நாளுக்கு நாள் பொய்களை சொல்லி, பிறகு உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பதை ராகுல் காந்தி கொள்கையாக கொண்டுள்ளார். அப்படிப்பட்டவருக்கு ஆதரவாக வருபவர், பொய்களை அடித்தளமாகக் கொண்ட ஒரு கட்சியின் தலைவர்.

திமுகவின் ஓட்டு திருட்டு :

ஓட்டு திருட்டுக்கு மிகவும் பிரபலமான திமுகவின் திருமங்கலம் பார்முலா. அதேபோல, பிரசாரம் முழுதும் வாக்காளர்களை கால்நடைகளைப் போல அடைத்து வைத்து, இறுதியில் அவர்களுக்கு கொலுசு, பாத்திரங்கள், குக்கர் உள்ளிட்டவை கொடுத்தது தான் திமுகவின் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பார்முலா. இப்படியிருக்கையில், தற்போது ஜனநாயகம் குறித்து பேசுவதுதான் தான் வேடிக்கை.

மேலும் படிக்க : TVK Vijay : ராகுல் காந்தி கைது : முதல் ஆளாக ’குரல் கொடுத்த விஜய்’

நோட்டீசுகளுக்கு பதில் கொடுங்க :

இந்த வெற்று நாடகங்களுக்கு பதிலாக, முதல்வர் ஸ்டாலின் அவரது சகோதரர் ராகுலை கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரியின் நோட்டீஸ்களுக்கு பதிலளிக்க உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in