BJP President Nainar Nagendran About DMK Party After ADMK BJP Alliance 
தமிழ்நாடு

பாஜக-அதிமுக கூட்டணியை பார்த்து திமுகவிற்கு பயம் : நயினார் கருத்து

Nainar Nagendran About DMK : பாஜக - அதிமுக கூட்டணி உருவான நாளில் இருந்து திமுகவினர் பதற்றத்தில் இருப்பதாக, நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Kannan

பிரதமர் மோடி நெல்லை வருகை :

Nainar Nagendran About DMK : நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ” பிரதமர் நரேந்திர மோடி 26ம் தேதி மாலை 6 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு(Thoothukudi Airport) வருகை தர உள்ளார். ரூ.350 கோடி மதிப்பிலான புதிய முனையத்தை திறந்து வைக்கிறார்.

தமிழகத்தில் மத்திய அரசு திட்டங்கள் :

சிலர் தமிழகத்திற்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்று விமர்சிக்கிறார்கள். புதிய ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், விமான நிலையங்களும், விமானத் தடங்களும் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. கங்கை கொண்ட சோழபுரத்தில் நடக்கும் கலை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். தூத்துக்குடி நிகழ்ச்சியில் மட்டும் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

திமுகவில் அன்வர் ராஜா :

அன்வர் ராஜா திமுகவில் இணைந்தது(Anwar Raja Join DMK) குறித்த கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், ஒவ்வொருவரும் அவரவர் விருப்பப்படி, ஒரு கட்சியில் இணைவார்கள். அதற்கு கருத்து சொல்ல முடியாது. ஏற்கனவே அதிமுகவுடன் பாஜக கூட்டணி(AIADMK BJP Kootani) வைத்த போது, அதில் அங்கம் வகித்தவர் அன்வர் ராஜா. இன்று அவருக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்துக்கும் பதில் சொல்ல முடியாது.

மேலும் படிக்க : திருவண்ணாமலையில் கட்டண உயர்வு : திமுக அரசுக்கு நயினார் கண்டனம்

எங்கள் கூட்டணியால் திமுக பதற்றம் :

பாஜக - அதிமுக கூட்டணி உருவான நாளில் இருந்து முதல்வரின் உருவமே மாறி விட்டது. திமுகவினர் ஒரு பதற்றத்தில் இருக்கின்றனர். நான்கு ஆண்டுகளாக மக்களுக்கு அவர்கள் ஏதும் செய்யவில்லை. தேர்தலுக்காகவே மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை(Magalir Urimai Thogai) பயன்படுத்துகிறார்கள். தேர்தல் பிரசாரம் செய்து தான் திமுகவை வீட்டுக்கு அனுப்பத் தேவையில்லை.

சென்னையில் கஞ்சா விற்பனை :

சென்னை மாநில கல்லூரி வாசலில் 'ஓரணியில் தமிழ்நாடு(Oraniyil Tamil Nadu)' என்ற பெயரில் திமுகவினர் கஞ்சா, கொக்கைன் போன்ற போதை பொருட்களை விற்கச் சென்றிருப்பார்கள். நெல்லையில் கல்லூரிகளை அதிகமாக கொண்டு வந்தேன். வானூரில் கட்டப்பட்டு வரும் அரசு கலை, அறிவியல் கல்லூரியின் பணிகள் முடிவடைந்தவுடன் முதல்வர் திறந்து வைப்பார். எழுச்சி பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமியை அஆகஸ்டு 3ம் தேதி சாப்பிட என் வீட்டிற்கு அழைத்து இருக்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

===============