Nainar Nagendran on DMK Youth Wing 
தமிழ்நாடு

’சாராயம் விற்பது தான் திமுக இளைஞரணி கோட்பாடா’ ? : நயினார் விளாசல்

Nainar Nagendran on DMK Youth Wing : ’சாராயம் விற்பது தான், திமுக இளைஞரணியின் கோட்பாடா' என, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Kannan

திமுக ஆட்சியில் சாராய பலி :

Nainar Nagendran on DMK Youth Wing : இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “ தி.மு.க., ஆட்சியில் சாராயம் குடித்து, செங்கல்பட்டு மற்றும் விழுப்புரத்தில் 22 பேர், கள்ளக்குறிச்சியில் 65 பேர் உயிரிழந்தனர். இன்னும் எத்தனை உயிர்களை தி.மு.க., அரசு காவு வாங்கப் போகிறது.

கள்ளக்குறிச்சியில் சாராயம்(Kallasarayam Issue) காய்ச்சியதாக, கோவிந்தராஜ் என்பவர் கைது செய்யப்பட்ட போது, அவர் தி.மு.க. நிர்வாகியே இல்லை என, திமுக தலைமை கதை கட்டியது.

கள்ளச் சாராயம் விற்கும் திமுகவினர் :

தற்போது, தி.மு.க., கவுன்சிலரும், இளைஞரணி நிர்வாகியுமான சுரேஷ்குமார் என்பவர், சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததற்காக கைதாகி இருக்கிறார் இதற்கு, தி.மு.க., என்ன கதை கூறப்போகிறது எனத் தெரியவில்லை.

மேலும் படிக்க : சீரழிந்து நிற்கும் அரசு பள்ளிகள் : திமுக அரசு மீது நயினார் காட்டம்

திமுகவின் கோட்பாடு இதுதானா? :

சாராயம் விற்பது தான், தி.மு.க.,வின் இளைஞரணி கோட்பாடா. இத்தகைய செயல்களில் ஈடுபடத்தான், தி.மு.க., கவுன்சிலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினாரா? சாராயம் ஆறாக ஓடும் இந்த ஆட்சி, பொற்கால ஆட்சியா?” இவ்வாறு அந்த அறிக்கையில் கேள்விகளை எழுப்பியுள்ள நயினார் நாகேந்திரன், திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார்.

==============