சீரழிந்து நிற்கும் அரசு பள்ளிகள் : திமுக அரசு மீது நயினார் காட்டம்

Nainar Nagendran on Ambur School Issue : மாணவியிடம் தலைமை ஆசிரியர் மதுபோதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தான் பள்ளிக் கல்வித்துறையின் பொற்காலமா என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
Nainar Nagendran on Ambur Melshanankuppam Government School Issue
Nainar Nagendran on Ambur Melshanankuppam Government School Issue
1 min read

Nainar Nagendran on Ambur School Issue : திருப்பத்தூர் அருகே மேல்சாணாங்குப்பம் கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் இந்தச் சம்பவம் நடைபெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தலைமை ஆசிரியர் அத்துமீறல் :

இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்(Nainar Nagendran), “ மேல்சாணங்குப்பம்(Melshanankuppam School Issue) அரசு துவக்கப் பள்ளியில், மது போதையில், ஐந்தாம் வகுப்பு மாணவியிடம், தலைமை ஆசிரியர் பாரத் அம்பேத்கர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

புகார் இருந்தும் நடவடிக்கை இல்லை :

அந்த தலைமை ஆசிரியர்(School Headmaster) தொடர்ந்து, நான்கு பள்ளிகளில் பாலியல் புகாரில் சிக்கி, இடமாற்றம் செய்யப்பட்டு, 15 நாட்களுக்குள், மீண்டும் இக்குற்றத்தில் ஈடுபட்டிருப்பது, திமுக ஆட்சியில் அரசு பள்ளிகள் சீரழிந்து இருப்பதையே காட்டுகிறது.

கண்துடைப்புக்காக நடவடிக்கை? :

இதுபோன்ற குற்றங்கள் வெளிவரும் போதெல்லாம், கண் துடைப்புக்காக, கைது செய்து விட்டு, 'பாலியல் குற்றத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ் ரத்து செய்யப்படும்' என முழங்குகின்றனர்.

மேலும் படிக்க : ’அரசு ஆசிரியர்களே அத்துமீறி நடப்பதா?’: நயினார் நாகேந்திரன் காட்டம்

பள்ளிக் கல்வித்துறையின் பொற்காலமா?

பின், அந்த செய்தி அடங்கியதும் குற்றம் புரிந்த ஆசிரியரை வேறு கல்வி நிலையத்துக்கு இடமாற்றம் செய்து, மாணவர்களின் பாதுகாப்பை பலியிடுவது தான், பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலமா?” இவ்வாறு நயினார் நாகேந்திரன்(Nainar Nagendran Tweet) கேள்வி எழுப்பி இருக்கிறார்.

============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in