Vice Presidential Election 2025 Polls : குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் தனது உடல்நிலையை காரணம் காட்டி, ஜூலை 21ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து செப்டம்பர் 9ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
துணை ஜனாதிபதி தேர்தல் இருமுனைப் போட்டி :
C.P. Radhakrishnan vs Sudershan Reddy : மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) சார்பில், தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர்.
சி.பி. ராதாகிருஷ்ணன் :
68 வயதாகும் சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிரா ஆளுநராக உள்ளார். கோவையை சேர்ந்த இவர் அனைவரிடமும் சுமுகமாக பழகக் கூடியவர். 1998 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் வெற்றி பெற்று எம்பியானவர்(CP Radhakrishnan). மகாராஷ்டிர ஆளுநராக 2024 ஜூலை 31 முதல் பதவி வகித்து வருகிறார்.
சுதர்சன் ரெட்டி :
இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி, தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர். 79 வயதாகும் இவர், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி உள்ளார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு ஜூலையில் ஓய்வுபெற்றார். தனது பணிக்காலத்தில் வரலாற்று சிறப்புமிக்க பல தீர்ப்புகளை வழங்கி இருக்கிறார்.
துணை ஜனாதிபதி தேர்தல், வாக்குப்பதிவு :
நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். முதல் ஆளாக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை(PM Modi Casts 1st Vote In Vice Presidential Election 2025 Poll) செலுத்தினார். இதையடுத்து, பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் வாக்களித்து வருகிறார்கள்.
788 எம்பிக்கள் வாக்களிக்கின்றனர் :
மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாநிலங்களவை உறுப்பினர் 233 பேரும் (தற்போது 5 இடங்கள் காலி), மாநிலங்களவை நியமன உறுப்பினர் 12 பேரும், மக்களவை உறுப்பினர்கள் 543 பேரும் (ஒரு இடம் காலி) வாக்களிப்பார்கள்.
மேலும் படிக்க : Vice President Election : இன்று தேர்தல் : CPR -க்கு வெற்றி வாய்ப்பு
சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வெற்றி வாய்ப்பு :
நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஆளும் கூட்டணிக்கே அதிக பெரும்பான்மை உள்ளது. 542 மக்களவை உறுப்பினர்களில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு 293 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. 240 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவையில், ஆளும் கட்சி கூட்டணிக்கு 129 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இரு அவைகளிலும் உள்ள மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 786. இதில், 394 உறுப்பினர்களின் ஆதரவை பெறுபவர் குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்படுவார். என்டிஏ கூட்டணிக்கு 422 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இதனால், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அதிக வெற்றி(C P Radhakrishna Vice President) வாய்ப்பு உள்ளது.
===============