Vice President Election : நாளை தேர்தல் : CPR -க்கு வெற்றி வாய்ப்பு

Vice President Election 2025 Date : துணை ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், என்டிஏ வேட்பாளராக சி. பி. ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி இடையே போட்டி நிலவுகிறது.
Vice President Election 2025 C P Radhakrishnan vs Sudershan Reddy Vice President Candidate
Vice President Election 2025 C P Radhakrishnan vs Sudershan Reddy Vice President Candidate
2 min read

15வது துணை ஜனாதிபதி தேர்தல் :

Vice President Election 2025 Date : 14வது துணை ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர் உடல் நிலையை காரணம் காட்டி, ஜூலை 21ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். எனவே அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்து எடுக்க செப்டம்பர் 9த் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

என்டிஏ வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் :

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கடசி வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்தவரும், மகாராஷ்டிரா மாநிலத்தின் தற்போதைய ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்(CP Radhakrishnan Vice President). தமிழகத்தை சேர்ந்த ஒருவர் மீண்டும் துணை குடியரசு தலைவராக வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இதற்கு முன்பு, ஆர். வெங்கட்ராமன் துணை குடியரசு தலைவராக பொறுப்பு வகித்தார்.

இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன ரெட்டி :

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தெலங்கானாவை சேர்ந்தவருமான பி.சுதர்சன ரெட்டி போட்டியிடுகிறார். இந்த தேர்தலை ஒரு சித்தாந்த போர் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்தநிலையில், துணை ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறுகிறது. டெல்லியில் இதற்கான வாக்குப்பதிவு நடைபெறும்.

எம்பிக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் :

இந்த தேர்தலில் நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க தகுதியானவர்கள். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தன் வெற்றியை உறுதி செய்வதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தேர்தலில் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து தேசிய ஜனநாயக உறுப்பினர்களுக்கு பாஜக சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தியா கூட்டணி சார்பில் இன்று மாதிரி வாக்குப்பதிவும் நடைபெறுகிறது.

நாளை வாக்குப்பதிவு, மாலையில் வாக்கு எண்ணிக்கை :

துணை ஜனாதிபதி தேர்தல் அதிகாரியும், மாநிலங்களவை செயலாளருமான பி.சி.மோடி கூறுகையில், “துணை ஜனாதிபதி தேர்தல் செவ்வாய்கிழமை (நாளை) நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறை எண் எப்-101ல் நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அது நிறைவு பெற்றதும் மாலை 6மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவு அறிவிக்கப்படும்.

781 எம்பிக்கள் வாக்களிப்பார்கள் :

இந்த தேர்தலில் மொத்தம் 788 எம்.பி.க்கள் வாக்களிக்கலாம். ஆனால், 7 எம்பி பதவியிடங்கள் காலியாக உள்ளதால் 781 பேர் மட்டும் இந்த முறை தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். மொத்தமுள்ள 543 மக்களவை உறுப்பினர் பதவியிடங்களில் 2 இடம் காலியாக உள்ளது. இதனால், 541 மக்களவை எம்பிக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 233 மாநிலங்களவை உறுப்பினர்களில் 5 இடம் காலியாக இருக்கிறது. இதனால், 228 மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் தவிர மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்கள் 12 பேரும் துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கலாம்.

சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி உறுதி :

ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 439 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளதால் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. இந்திய கூட்டணியின் வேட்பாளருக்கு தற்போதைய நிலவரத்தின்படி 324 வாக்குகள் கிடைக்கும்(Vice President Election Results 2025). பிஜூ ஜனதா தளத்தின் 7 எம்.பி.க்கள், பிஆர்எஸ் கட்சியின் 4 எம்.பி.க்கள் மற்றும் அகாலிதளம் உள்ளிட்ட 3 சிறிய கட்சிகளின் தலா ஒரு எம்பிக்கள் யாருக்கு வாக்களிக்க போகிறார்கள் என்பதை இன்னமும் அறிவிக்கவில்லை. ரகசிய வாக்குப்பதிவு முறை என்பதால் ஒரு சிலர் கட்சி மாறி வாக்களிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

துணை ஜனாதிபதி - மாத ஊதியம் கிடையாது :

இந்திய அரசியலமைப்பின் இரண்டாவது உயரிய பதவியான துணை ஜனாதிபதிக்கு மாத ஊதியம் என எதுவும் கிடையாது. ஆனால் ஏராளமான சலுகைகள் உள்ளன. அரசியல் சட்ட அந்தஸ்துடைய பதவிகளில் ஊதியம் ஏதுமில்லாத ஒரே பதவி இது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : சாக்கு சொல்லாமல் CPRயை ஆதரியுங்க: ஸ்டாலினுக்கு அண்ணாமலை வேண்டுகோள்

ராஜ்யசபா தலைவராக மாத ஊதியம் :

அதேசமயம் மாநிலங்களவை தலைவராக பணியாற்றுவதற்காக துணை ஜனாதிபதிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஊதியமாக வழங்கப்படும்(Vice President Salary in India). துணை ஜனாதிபதிக்கு இலவச தங்குமிடம், மருத்துவப்படிகள், தனிப்பட்ட பாதுகாப்பு வசதிகள், ரயில் மற்றும் விமானப் பயணம், மொபைல் போன் சேவை மற்றும் ஊழியர்கள் என பல்வேறு சலுகைகள் உள்ளன. மேலும், அவர் ஓய்வு பெற்ற பிறகு மாதம் ரூ.2 லட்சம் ஓய்வூதியம் உட்பட பல்வேறு சலுகைகள் கிடைக்கும்.

==================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in