IMD Weather Update on Northeast Monsoon Starts in Tamil Nadu 
தமிழ்நாடு

TN Weather Update : தொடங்கியது வடகிழக்கு பருவமழை! மக்களே உஷார்!

TN Weather : சென்னை வானிலை மையம் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ள நிலையில். அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் 20 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Bala Murugan

வடகிழக்கு பருவமழை தொடக்கம்

TN Weather Update : சென்னை வானிலை மையம் தமிழகத்தில் அதிகளவில் மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாகவும்(Northeast Monsoon), தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 24ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது நேற்று கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. அதேபோல் நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, இன்றும் அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் 19-ம் தேதி வாக்கில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள-கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க : 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை : தீபாவளிக்கு ஆட்டம் ஆரம்பம்

தென் மண்டல தலைவர் அமுதா

வடகிழக்கு பருவ மழை குறித்து செய்தியாளர்களை சந்தித்த தென் மண்டல தலைவர் அமுதா(Chennai IMD Chief P Amudha Press Meet), தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தார். மேலும், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.