24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை : தீபாவளிக்கு ஆட்டம் ஆரம்பம்

Heavy Rain Alert in Tamil Nadu : வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
Onset of Northeast Monsoon tomorrow, heavy rains expected in various parts of Tamil Nadu
Onset of Northeast Monsoon tomorrow, heavy rains expected in various parts of Tamil Nadu
1 min read

வடகிழக்கு பருவமழை

Heavy Rain Alert in Tamil Nadu : நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை விடைபெற்று இருக்கிறது. இதைத்தொடர்ந்து, தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது. பல மாவட்டங்களில் ஏற்கனவே நல்ல மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி வரும் நிலையில், இன்றும் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

கனமழை - நிரம்பும் நீர்நிலைகள்

விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று, இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் நாளை கனமழை

பருவமழை தொடக்கத்திலேயே தீவிரம் அடையும் வாய்ப்பு இருப்பதால், சென்னையில் நாளை பலத்த மழை(Chennai Rain Alert) பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மழை தீவிரம் அடைந்தால், தீபாவளிக்கு வெடி சத்தத்தை விட மழை சத்தம் அதிகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. சென்னை நகரத்தை நோக்கி ஏராளமான மேகங்கள் நகர்ந்து வருகின்றன என்று தமிழ்நாடு வெதர்மென் தெரிவித்து இருக்கிறார். இதன்காரணமாக, நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

மேலும் படிக்க : 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை : இந்திய வானிலை மையம் கணிப்பு

படிப்படியாக தீவிரம் அடையும் மழை

ராமநாதபுரம் முதல் சென்னை வரை கடலோர மாவட்டங்கள் முழுவதும் பரவலாக மழை பெய்யும். இது தொடக்கம் தான், புயல் உருவானால், மழை தீவிரம் அடையும். மிக பலத்த மழை பெய்தால், வெள்ளப் பெருக்கும் இருக்கும். ஒருசில இடங்களில் இந்த ஆண்டு 50 சென்டி மீட்டர் வரை மழையை எதிர்பார்க்கலாம் என எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.

============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in