Chennai Meteorological Department Report on Shakti Cyclone Update in Tamil 
தமிழ்நாடு

Shakti Cyclone Update: வலுவிழந்ததா சக்தி புயல்.? நீடிக்கும் கனமழை!

Shakti Cyclone Update: தமிழகத்தில் இன்றும், நாளையும் (அக்05) 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் ஒரு சில இடங்களில் லேசான முதல் கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம்.

Bala Murugan

வானிலை ஆய்வு மையம் :

Shakti Cyclone Update : மழைக்காலம் ஆரம்பமான நிலையில், இரண்டு மாதங்களாகவே பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மழை பல்வேறு இடங்களில் கனமழையாக வலுப்பெற்றுள்ளது. இதனால் புயல், வெள்ளம் வருவதற்கான காரணங்கள் இருக்கிறது என வானிலை நிபுணர்கள் முன்கூட்டியே கூறியிருந்த நிலையில், தற்பொழுது மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்(Chennai Meteorological Department) அறிக்கை ஒன்றை() வெளியிட்டுள்ளது.

வலுவிழந்த சக்தி புயல் :

வட கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த சக்தி புயல், மேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்றது(Sakthi Puyal Update in Tamil). இந்த புயல் கரையை கடக்காமல் கடலிலேயே வலுவிழக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் மஹாராஷ்டிரா கடற்கரையில் பலத்த காற்று வீசும் என்றும் தமிழகத்தில் இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இதனால், தமிழகத்தில் குறிப்பாக திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை. சிவகங்கை, விருதுநகர் , ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்யும்(TN Rain Update) என தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க : வெள்ளத்தில் மிதக்கும் ‘Mumbai’ : வரலாறு காணாத மழை, மக்கள் அவதி

பொதுமக்கள் எச்சரிக்கை

தொடர்ந்து இனி மழை வலுப்பெற்று, மழைக்காலம் தொடங்கியுள்ளதால், முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகள், உடமைகள், உணவுகள் மற்றும் உடல்நலம் உள்ளிட்டவற்றை பேணி பாதுகாத்து, தயார் படுத்தி வைத்து கொள்ள வேண்டும். மேலும், புயல், வெள்ளம் வந்தால் கூட தாங்கள் எவ்வாறு மீண்டு வருவது, தற்காத்து கொள்வது என அனைத்தையும் தெரிந்து கொண்டு வரும் மழைக்காலல்தை லாவகமான முறையில் கையாள வேண்டும் என மழைக்காலத்தை கருத்தில் கொண்டு வானிலை நிபுணர்கள், ஊட்டத்சத்து நிபுணர்கள் கூறி வருகின்றனர்.