
மும்பையை புரட்டி போட்ட மழை :
Mumbai Rain News Today in Tamil : வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால், தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. காஷ்மீர், உத்தரகாண்டில் மேக வெடிப்பால் பெருமழை பெய்து, பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்தநிலையில், மகாராஷ்டிரா தலைநகர் மும்பை இதுவரை காணாத மழையின்(Mumbai Rain in History) பிடியில் சிக்கி தவிக்கிறது. 8 மணி நேரத்தில் 18 சென்டி மீட்டர் மழை பதிவாகினது. கடந்த 100 ஆண்டுகளில் பதிவான மழை அளவுகளை விட அதிகமாக இருப்பதால், சாதனை முறியடிக்கப்பட்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மும்பையில் இடைவிடாத மழை :
மும்பையில் இரவு, பகல் என இடைவிடாது(Mumbai Rain News) பெய்யும் மழை காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. ரயில், விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மும்பையில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கி இருப்பதால், புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை(School Holiday in Mumbai) அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலை தேர்வுகளும் மாற்றி வைக்கப்பட்டுள்ளன.
தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் :
மும்பை நகரின் முக்கிய வீதிகள் மற்றும் மேம்பாலங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தாதர், கிங் சர்க்கிள் பகுதிகளில் வாகன ஓட்டிகள் நீரில் சிக்கிய நிலையில் காணப்பட்டனர். அந்தேரி சுரங்கப்பாதை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. தாழ்வான பகுதிகளை மழை நீர் சூழ்ந்து இருப்பதால், வாகனங்களை இயக்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து பாய்வதால், பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.
48 மணி நேரத்திற்கு எச்சரிக்கை :
கனமழையைக் கருத்தில் கொண்டு, மும்பை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த வரும் 48 மணி நேரம் மிகவும் முக்கியமானது என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி : மிதமான மழைக்கு வாய்ப்பு
ராய்காட், ரத்னகிரி, சத்தாரா, கோல்ஹாபுர், புனே(Pune Rain) உள்ளிட்ட பகுதிகளுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அதிகாரிகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
======