Chennai's First Iron Flyover Inauguration Today in T Nagar : சென்னையில் பல்வேறு சிமென்ட் மற்றும் இதர பாலங்கள் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால், இன்றளவும் மக்கள் தொகை அதிகரிப்பால் கூட்ட நெரிசலும், போக்குவரத்து நெரிசலும் சென்னையில் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில், புதிதாக சென்னயைின் முக்கிய நகரமான தியாகராயநகர் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் பிரதான சாலையை இணைக்கும் வகையில் 3,800 மெட்ரிக் டன் இரும்பினால் வடிவமைக்கப்பட்டு 164.92 கோடி ரூபாய் செலவில் முதல் இரும்பு மேம்பாலம்(First Steel Bridge in Chennai Budget) கட்டப்பட்டுள்ளது. இதற்கு "ஜெ. அன்பழகன் மேம்பாலம்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல் இனி இருக்காதா ?
போக்குவரத்து நெரிசலுக்கு(Traffic Jam in Chennai) முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள இந்த இரும்புப்பாலம் 1200 மீட்டர் நீளம் மற்றும் 8.40 மீட்டர் அகலத்தில் 53 இரும்பு தூண்களுடன் அமைக்கப்பட்டு தெற்கு உஸ்மான் சாலையில் இருவழிப்பாதையாக ஏற்கனவே உள்ள 800 மீட்டர் நீள கான்கிரீட் மேம்பாலத்துடன், உயரிய தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் இந்த மேம்பாலம் 2 கிலோ மீட்டர் நீளத்திலும் தியாகராய நகர் பேருந்து நிலையத்திலிருந்து இந்தப் பாலத்தில்(Chennai Iron Flyover Length & Distance) ஏறுவதற்கு 120 மீட்டர் நீளத்திலும், தெற்கு உஸ்மான் 10000 பாலத்திலிருந்து தியாகராய நகர் பகுதிக்கு இறங்குவதற்கு 100 மீட்டர் நீளத்திலும் அணுகு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் இருபுறமும் நடைபாதைகளுடன் 6 மீட்டர் அகல சேவை சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
வாழ்வியல் காட்சிகளுடன் மேம்பால சுவர் :
சென்னை மாநகராட்சியின் மிக நீண்ட பாலமாக 2 கிலோ மீட்டர் நீளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள(Longest Flyover in Chennai) இந்த பாலத்தில் தினசரி சராசரியாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணித்து, 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் பயன்பெறுவார்கள். சுமார் சிங்காரச் சென்னையை நோக்கிய பயணத்தில் புதிய பெருமைமிகு அடையாளமாக புதிய தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள இம்மேம்பாலத்தின் தடுப்புச் சுவர்களில் தியாகராய நகர் மற்றும் சுற்றுப்புறங்களின் வாழ்வியல் காட்சிகள் சித்தரிக்கப்பட்டு, அப்பகுதி மக்களின் சிறப்பிக்கின்றன.
மேலும் படிக்க : ஒரே Appல் பொது போக்குவரத்து : ’Chennai One’ மொபைல் செயலி அறிமுகம்
அழகிய ஓவியங்களாக உழைப்பையும் மரபையும் சிறப்பிக்கின்றன. இந்நிலையில், இந்த மேம்பால திறப்பு நிகழ்ச்சியில்(T Nagar Iron Bridge Open) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.