Coimbatore Avinashi Road flyover longest in Tamil Nadu, open to public on October 9  
தமிழ்நாடு

கோவையின் புதிய அடையாளம் ’அவினாசி மேம்பாலம்’ : 10 கிமீ நீளம்

Avinashi Road Flyover in Coimbatore : தமிழகத்தில் மிக நீளமாக உருவெடுத்து நிற்கும் கோவை அவினாசி ரோடு மேம்பாலம், அக்டோபர் 9ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.

Kannan

போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்ள மேம்பாலங்கள் :

Avinashi Road Flyover in Coimbatore :  பெருகிவரும் வாகன போக்குவரத்துக்கு ஏற்ப, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தை நெரிசல் இல்லாமல் சென்று சேர மேம்பாலங்கள் தேவைப்படுகின்றன. எனவேதான், நெடுஞ்சாலைகளிலும் தேவைப்படும் இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு, விரைவான பயணத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

வேகமான வளர்ச்சி காணும் கோவை :

அந்த வகையில், சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரும் நகரமான கோவையில், தமிழகத்திலேயே மிக நீளமான மேம்பாலம்(Tamil Nadu Longest Flyover in Coimbatore) கட்டப்பட்டு இருக்கிறது. கோவை அவினாசி ரோடு மேம்பாலத்தை அக்டோபர் 9ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்(Avinashi Flyover Opening Date). இந்த மேம்பாலம் திறக்கப்பட்டால், 10 நிமிடத்தில் விமான நிலையத்தை சென்றடைய அடைய முடியும் என்றார்கள். இந்த பாலம் தான் தமிழ்நாட்டிலேயே மிக நீளமான மேம்பாலம் என்ற பெருமையை பெற இருக்கிறது.

கோவையில் உட்கட்டமைப்பு வசதிகள் :

10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்(Coimbatore Population) இருந்த கோவை இன்றைக்கு 35 லட்சம் என்கிற அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. இதன் காரணமாக வாகன போக்குவரத்தும் அதிகமாகி விட்டது. கோவையின் வளர்ச்சி வேகத்திற்கு ஏற்ப, உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

10 கி.மீ. நீள மேம்பாலம் :

உப்பிலிப்பாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை அவினாசி சாலையை(Avinashi Road) பொறுத்தவரை, சென்னை அண்ணா சாலையோடு ஒப்பிடலாம். நெருக்கடியான சாலை, அதிக வாகனங்கள் செல்வது, சிக்னல்களும் அதிகம் என்பதால், இந்தச் சாலையில் மேம்பாலம் போன்று நெருக்கடியான சாலை. இங்கு உள்ள சிக்னல்கள் எண்ணிக்கை மிக அதிகம். இதனால் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

தமிழகத்திலேயே பெரிய மேம்பாலம் :

அதன்படி, உப்பிலிப்பாளையம் தொடங்கி கோல்டுவின்ஸ் வரை 10.1 கி.மீ. தூரத்திற்கு ரூ.1,791 கோடியில் மேம்பாலம்(Avinashi Flyover Distance & Budget) கட்டப்பட்டு இருக்கிறது. 300 கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் மீது தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவைக்கு புதிய அடையாளம் :

இந்த மேம்பாலம் திறக்கப்பட்டால், கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர், சென்னை செல்வது எளிதாவிடும். மேம்பால தூரத்தை 10 முதல் 12 நிமிடங்களில் கடக்க முடியும் என்பதால், உப்பிலிபாளையத்தில் இருந்து விமான ஒநிலையத்தை 10 நிமிடங்களில் சென்று சேரலாம். ஏறு தளம், இறங்கு தளம் ஆங்காங்கே இருப்பதால் அனைத்து பகுதிகளுக்கும் செல்வோரும் மேம்பாலத்தை பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க : நான் வாங்கிய முதல், ஒரே அசையாச் சொத்து இதுதான் : அண்ணாமலை விளக்கம்

போக்குவரத்து நெரிசல் குறையும் :

இந்த மேம்பாலம் திறக்கப்பட்டால் அவினாசி சாலையில் 50 முதல் 60 சதவீதம் போக்குவரத்து குறைந்து விடும் என்று கூறப்படுகிறது. கோவையை விட்டு வெளியே செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த பாலத்தை பயன்படுத்தும் என்பதால், மேம்பாலத்தில் போக்குவரத்து கடுமையாக இருக்கும். கோவையின் பிரதான அடையாளங்களில் ஒன்றாக இந்த மேம்பாலம்(Avinashi Road Flyover) திகழ இருக்கிறது.

==============