Premalatha Vijayakanth urges the Central Government to hold consultations with state governments google,ai
தமிழ்நாடு

தொகுதி மறுவரையறை : மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!

தொகுதி மறுவரையறை மூலம் தமிழகத்தில் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59 ஆக உயரும். மாநில அரசுகளுடன் மத்திய அரசு கலந்தாலோசிக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Kavitha prasanna

Premalatha Vijayakanth urges the Central Government to hold consultations with state governments!

தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் அதிகாரப்பூர்வ மசோதாவைத் தாக்கல் செய்யாத நிலையில், தமிழக அரசு அவசரமாகத் தனித்தீர்மானம் கொண்டுவந்தது ஏன் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்

சட்டமன்றத்தில் பேசிய அவர், தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 59-ஆக உயர வாய்ப்புள்ளது என்றும், இது வரவேற்கத்தக்க ஒரு சிறப்பு அம்சம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் தேவைகளை நிறைவேற்றுவது எளிதாகும்

தற்போது இந்தியாவில் சராசரியாக 10 லட்சம் மக்களுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலை உள்ளது. தொகுதி மறுவரையறைக்கு பிறகு இது 7 முதல் 8 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி. என்ற விகிதத்தில் குறையும் என்பதால், மக்கள் தேவைகளை நிறைவேற்றுவது எளிதாகும் என்றார்.

மேலும் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.

தற்போதைய நிலவரத்த பட்டியலிட்ட பிரேமலதா விஜயகாந்த்

  • தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ விகிதாச்சாரம் 7.2% என்ற அளவிலேயே தொடர வேண்டும்.

  • மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது.

  • தொகுதி மறுவரையறை குறித்து அனைத்து மாநில அரசுகளுடனும் மத்திய அரசு உரிய ஆலோசனை நடத்த வேண்டும்.

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வரவேற்பு

மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தின் மூலம் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதை முழுமையாக வரவேற்பதாக தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த், அரசியலில் பெண் தலைவர்களை ஊக்கப்படுத்தும் முதல்வர் மற்றும் அனைத்துக் கட்சியினருக்கும் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

இதையும் படிங்க: தனித் தீர்மானத்திற்கு BJP எதிர்ப்பு : தவெக அரசுக்கு என்ன அவசரம்?, மறுவரையறை பரிசீலனையில் தானே உள்ளது : எம்எல்ஏ போஜராஜன்!

=====