தனித் தீர்மானத்திற்கு BJP எதிர்ப்பு : தவெக அரசுக்கு என்ன அவசரம்?, மறுவரையறை பரிசீலனையில் தானே உள்ளது : எம்எல்ஏ போஜராஜன்!

தொகுதி மறுவரையறை பரிசீலனையில் மட்டுமே இருப்பதால், அதற்காக தனித் தீர்மானம் கொண்டு வர வேண்டிய அவசரம் என்ன என்று, பாஜக கேள்வி எழுப்பி இருக்கிறது.
BJP has questioned the urgency of bringing a separate resolution regarding constituency delimitation
BJP has questioned the urgency of bringing a separate resolution regarding constituency delimitationAI generated
1 min read

மாற்றத்தை ஏற்க வேண்டும்

தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் மீது பேசிய பாஜக எம்எல்ஏ போஜராஜன், எப்போதுமே மாற்றத்தை நாம் ஏற்று கொள்ள வேண்டும்.

அப்படி மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்பியதால் தான் நீங்கள் இங்கே அமர்ந்து இருக்கிறீர்கள் என்று தவெக எம்எல்ஏ-க்கள் அமர்ந்திருந்த பக்கம் கைகாட்டி பேசினார்.

அடுத்த தலைமுறைக்காக புதிய நாடாளுமன்றம்

அடுத்த தலைமுறையை நினைத்தே தான் புதிய நாடாளுமன்றம் சுமார் 850 உறுப்பினர்கள் அமரும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளதே தவிர, வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.

ஆனால் நீங்கள் சொல்லும் ஒரு விஷயத்தில் நான் உடன்படுகிறேன். நிச்சயமாக தமிழகத்திற்கான நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமே தவிர, ஒருபோதும் குறைய கூடாது.

பரிசீலனையில் தான் இருக்கிறது

ஆனால் இன்னும் விவாத நிலையில் மற்றும் பரிசீலனையில் இருக்கும் விஷயத்தில் தனித்தீர்மானம் கொண்டு வரும் அளவுக்கு அவசரம் காட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்

பாஜக எதிர்ப்பு

எனவே, தவெக அரசு தொகுதி மறுவரையறைக்கு எதிராக கொண்டு வந்த இந்த தீர்மானத்தை பாஜக ஆதரிக்கவில்லை என்று போஜராஜன் குறிப்பிட்டார்.

==================

logo
Thamizh Alai
www.thamizhalai.in