Controversial remarks regarding Saivism, Vaishnavism, and women: Arrest warrant issued for former Minister Ponmudi!
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்துச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழக்கின் பின்னணி
கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
பொன்முடியின் வெறுப்பு பேச்சு
வெறுப்புப் பேச்சு பேசிய பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவரைத் தண்டிக்கக் கோரியும் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன் தனிநபர் புகார் மனுவைத் தாக்கல் செய்தார்.
உயர் நீதிமன்ற உத்தரவு
இதனைத் தொடர்ந்து ஜார்ஜ் டவுன் நீதிமன்ற விசாரணை உத்தரவை ரத்து செய்யக்கோரி பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவு
இவ்வழக்கு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்திர பாண்டியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடி தரப்பில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
செப்டம்பர் 2-ல் அடுத்த விசாரணை
அம்மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி சுந்திர பாண்டியன், முன்னாள் அமைச்சர் பொன்முடியை செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
மேலும், இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 2-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : “தொலைநோக்கு பார்வையுடன் பொது, வேளாண் பட்ஜெட்” : மக்களின் முன்னேற்றத்திற்கு புதிய நம்பிக்கை : முதல்வர் விஜய் பாராட்டு..!
=====