“தொலைநோக்கு பார்வையுடன் பொது, வேளாண் பட்ஜெட்” : மக்களின் முன்னேற்றத்திற்கு புதிய நம்பிக்கை : முதல்வர் விஜய் பாராட்டு..!

“தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், பொது, வேளாண் பட்ஜெட்டுகள்" அமைந்து இருப்பதாக, முதல்வர் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார்.
CM Vijay  praised general and agriculture budgets, inspire confidence among  people
CM Vijay praised general and agriculture budgets, inspire confidence among people AI generated
1 min read

தவெக அரசு - பட்ஜெட்டுகள் தாக்கல்

தமிழக சட்டமன்ற தேர்தல்ல வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் விஜய் தலைமையில் ஆட்சி அமைத்தது. இதையடுத்து தவெக அரசின் முதல் பொது பட்ஜெட் நேற்றும், வேளாண் பட்ஜெட் இன்றும் தாக்கல் செய்யப்பட்டன.

பாராட்டும் வகையில் பட்ஜெட்டுகள்

இந்தநிலையில், பட்ஜெட்டுகள் தாக்கல் பற்றி முதல்வர் விஜய் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டின் வளர்ச்சியை இலக்காகவும், மக்கள் நலனை மையமாகவும் கொண்டு, ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் அனைவரும் பாராட்டும் வகையில் 2026 - 27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளோம்.

அமைச்சர்களுக்கு மனமார்ந்த வாழ்த்து

நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் மரிய வில்சனுக்கும், வேளாண்மை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத்துக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

தொலைநோக்கு பார்வையுடன் பட்ஜெட்

தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திருத்திய நிதிநிலை அறிக்கையானது மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள்...

தொழில்முனைவோர், அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கும் புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

வேளாண் பட்ஜெட் - அனைத்து தரப்பினருக்கானது

வேளாண்மை நிதிநிலை அறிக்கையானது, தமிழ்நாட்டின் வேளாண் வளர்ச்சியோடு, அதன் தொழில் சார்ந்த கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு, பால்வளம், உணவுப் பொருட்களைப் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் போன்ற தொழில்களையும் மேம்படுத்துவதோடு..

வெற்றிப் பயணம் தொடரும்

அனைத்துத் தரப்பு விவசாயிகளின் நலனையும் வாழ்வாதாரத்தையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்” என விஜய் தெரிவித்துள்ளார்.

===

logo
Thamizh Alai
www.thamizhalai.in