Premalatha Vijayakanth About TVK Vijay 2nd Manadu in Madurai 
தமிழ்நாடு

"விஜய் எங்கள் தம்பி தான்” : பிரேமலதா விஜயகாந்த் திடீர் ஆதரவு

Premalatha Vijayakanth About TVK Vijay 2nd Manadu : விஜயகாந்தை அண்ணன் என்று அழைக்கும், விஜய் தங்கள் தம்பி தான் என்று, பிரேமலதா தெரிவித்து இருக்கிறார்.

Kannan

விஜயகாந்தை புகழ்ந்த விஜய் :

Premalatha Vijayakanth About TVK Vijay 2nd Manadu : மதுரை மாநாட்டில் பேசிய நடிகர் விஜய் மதுரை என்றால் எம்ஜிஆரும், விஜயகாந்தும் நினைவுக்கு வருவதாக குறிப்பிட்டார். விஜயகாந்தை அண்ணன் என்று விளித்து, கூட்டத்தை ஆரவாரப்படுத்தினார். ”எம்ஜிஆரின் குணம் கொண்டவர் அண்ணன் விஜயகாந்த்(Vijayakanth). எம்ஜிஆருடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை, ஆனால், விஜயகாந்த் அவர்களோடு பழகி இருக்கிறேன். அவரை எப்படி மறக்க முடியும். அவரது ஆசிர்வாதத்துடன் இந்த அரசியலில் சாதித்து காட்டுவேன்” என்று விஜய் தெரிவித்தார்.

“உள்ளம் தேடி இல்லம் நாடி” :

தமிழ்நாடு முழுவதும் “உள்ளம் தேடி இல்லம் நாடி” என்னும் பிரச்சார பயணத்தை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்(Premalatha Vijayakanth Campaign) மேற்கொண்டு வருகிறார். கேப்டனின் ரத யாத்திரை, மக்களைத் தேடி மக்கள் தலைவர் என்னும் பெயர்களில் இந்த பிரச்சார பயணம் நடைபெற்று வருகிறது. கடலூர்(Cuddalore) மாவட்டம் பண்ருட்டி, மாளிகை மேடு, புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரசாரம் செய்தார்.

மக்களுக்காக தேமுதிக போராடும் :

பண்ருட்டியில் உரையாற்றிய பிரேமலதா விஜயகாந்த், அவர், “மக்களுக்கு எதிரான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் அதனை எதிர்த்து மக்களுடன் தேமுதிக தொடர்ந்து போராடும் என்று தெரிவித்தார்.

விஜய் எங்களுக்கு தம்பி தான் :

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், “மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய்(TVK Vijay 2nd Madurai Manadu) விஜயகாந்தை அண்ணன் என குறிப்பிட்டு பேசியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். ”விஜய் எங்களுக்கு தம்பி, அரசியலுக்கு வந்ததற்கு பிறகு வந்ததல்ல இந்த அண்ணன் தம்பி உறவு, கேப்டன் விஜயகாந்த் திரைத்துறையில் வந்ததில் இருந்து இந்த உறவு தொடர்கிறது.

இப்போது கூட்டணியில் இல்லை :

தேமுதிக தற்போது எந்தக் கட்சியுடனும் கூட்டணியில் இல்லை. ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி பற்றி அறிவிப்போம்” என்று பிரேமலதா விஜய்காந்த் கூறினார்.

மேலும் படிக்க : 234 தொகுதிகளில் நானே வேட்பாளர் : ஆட்சியை பிடிப்பேன், விஜய் சூளுரை

இதன்மூலம் விஜய்யுடன் கூட்டணி வைக்க தேமுதிக தயாராக இருப்பதை மறைமுகமாக பிரேமலதா உணர்த்தி இருக்கிறார். தவெக தலைமையில் தான் கூட்டணி என்ற விஜய்யின்(TVK Vijay Alliance) முடிவை ஏற்கும் கட்சிகள் கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது.

=====