234 தொகுதிகளில் நானே வேட்பாளர் : ஆட்சியை பிடிப்பேன், விஜய் சூளுரை

TVK Vijay Speech at TVK 2nd Madurai Manadu Update : 234 தொகுதிகளிலும் நானே வேட்பாளர், ஆட்சியை பிடித்தே காட்டுவேன் என்று விஜய் சூளுரைத்து உள்ளார்.
TVK Vijay Latest Speech at TVK 2nd Madurai Manadu Update
TVK Vijay Latest Speech at TVK 2nd Madurai Manadu Update
2 min read

தமிழக வெற்றிக் கழக மாநாடு :

TVK Vijay Speech at TVK 2nd Madurai Manadu Update : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரையில் சிறப்பாக நடைபெற்றது. பிரமாண்ட ஏற்பாடுகளுடன் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மாநாடு நடத்தப்பட்டது. ஒருமாத காலத்திற்கும் மேலாக பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. பிரமாண்ட மேடை, ரேப் வாக் நடக்க சிறப்பு மேடை, வாகனங்களை நிறுத்த விசாலமான இடம், தொண்டர்களுக்கு அடிப்படை வசதிகளோடு மாநாடு நடத்தப்பட்டது.

கடும் வெயில், தொண்டர்கள் பாதிப்பு :

இன்று காலை முதலே தொண்டர்கள் மாநாட்டு திடலில் குவியத் தொடங்கினர். மதுரையில் வெயில் வாட்டி வதைக்க குழுமியிருந்த தொண்டர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். பலர் மயக்கம் அடைய அவர்களுக்கு மருத்துவ குழுக்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. வெயிலை கருத்தில் கொண்டு, மாநாடு முன்கூட்டியே தொடங்கியது.

மாநாட்டு மேடையில் விஜய் :

தொண்டர்கள் ஆரவாரத்திற்கு இடையே மாநாட்டு திடலுக்கு வந்த நடிகர் விஜய்யை, வரவேற்கும் வகையில் ” மக்களின் மன்னனே” என்ற பாடல் ஒலிக்கப்பட்டது. அனைவரையும் பார்த்து கையசைத்த விஜய், மேடையில் இருந்த நிர்வாகிகளுடன் கைகுலுக்கினார்.

விஜய் Ramp Walk :

இதையடுத்து ரேம்ப் வாக் மேடையில் விஜய் நடந்து சென்றார். தொண்டர்கள் அவருக்கு கட்சித் துண்டை வீசி வாழ்த்து தெரிவித்தனர். சிலர் ஆர்வக் கோளாறில் அந்த மேடையில் ஏறி, விஜய்யுடன் கைகுலுக்க முயன்றனர். அவர்களை பாதுகாவலர்கள் வெளியேற்றினார். ரேம் வாக் மேடை முழுவதும் கூட விஜய்யால் நடந்து செல்ல முடியவில்லை. ஆர்ப்பரித்த தொண்டர்கள் அவர்கள் உற்சாக வெள்ளத்தில் மூழ்கடித்தனர்.

மாநாட்டு விழா முக்கிய அம்சங்கள் :

இதையடுத்து, தலைவர்களின் படத்திற்கு மரியாதை செலுத்திய விஜய், தொண்டர்களுடன் சேர்ந்து உறுதிமொழி ஏற்றார். பின்னர், பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மாநாட்டில் உரையாற்றினர். பெரியார், அண்ணா, எம்ஜிஆரை முன்னிறுத்தி அவர்களின் பேச்சு அமைந்து இருந்தது. இதன் மூலம் விஜய்யை திராவிட வாரிசாக மாநாடு மறைமுகமாக வெளிப்படுத்தியது.

சிங்கம் கதை கூறி பேச்சு :

பலத்த கரவொலிக்கு இடையே ஏற்புரை நிகழ்த்திய சிங்கத்தின் கம்பீரமான கதை ஒன்றை சொல்லி பேச ஆரம்பித்தார். ”சிங்கம் கூட்டமாக இருக்கும், தனியாக இருக்கவும் தெரியும். உயிருள்ள விலங்குகளை மட்டுமே சிங்கம் வேட்டையாடும்.காட்டில் ஒரு சிங்கம் மட்டுமே இருக்கும், அதுவும் அரசனாக இருக்கும்.

அனைவருக்கும் எனது உயிர் வணக்கம், வீரம் விளையும் மதுரை மண்ணை வணங்குகிறேன். எம்ஜிஆருடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் அவரை போன்றே வாழ்ந்த விஜயகாந்துடன் பழகி இருக்கிறேன். பெருமையாக இருக்கிறது. நல்ல அரசியலே நமது லட்சியம்.

2026ல் அரசியல் மாற்றம் உறுதி :

1966.1977ல் நடந்த வரலாற்று அரசியல் அதிசயம், 2026லும் தமிழகத்தில் நடக்கும். அதில் மாற்றமே இருக்காது. எனது குரல் ஒட்டுமொத்த தமிழகத்தின் குரல். எனது ஏற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. எனது கூட்டத்தை பார்த்து தப்புக் கணக்கு போடாதீங்க. எனது குரல் ஓங்கியே ஒலிக்கும்.

ஆட்சியை பிடித்து காட்டுவேன் :

2026ல் ஆட்சியை பிடித்தே காட்டுவேன். கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுகதான். இதில் எப்போதும் மாற்றம் இல்லை. இங்கு கூடியிருக்கும் கூட்டம் ஆட்சியாளருக்கு வேட்டாக மாறும். உறவு வைத்துக் கொள்ள நாங்கள் ஊழல் கட்சி கிடையாது. எனது குரல் உலகத் தமிழர்களுக்காக ஒலிக்கும். நமது கூட்டணி சுயமரியாதை கூட்டணியாக மட்டுமே இருக்கும்.

தவெக - திமுக இடையே போட்டி :

2026ல் திமுக- தவெக இடையேதான் போட்டி(TVK vs DMK). மீனவர்கள் நலன் காக்க பிரதமர் மோடி அவர்களே கச்சத் தீவை மீட்டுக் கொடுங்க. நீட் தேர்வை ரத்து செய்யுங்க. கீழடி ஆதாரங்களை பொது வெளிக்கு கொண்டு வாருங்க. தமிழ்நாட்டில் தாமரை மலராது. எம்ஜிஆர் இருந்தவரை, முதல்வர் நாற்காலி கனவு கூட யாராலும் காண முடியவில்லை.

ஸ்டாலின் அங்கிள், வெரி ராங்க் :

எம்ஜிஆர் கட்சியை கட்டிக் காப்பது யார்? 2026ல் என்ன செய்வது எனத் தெரியாமல் அக்கட்சி தொண்டர்கள் வேதனையில் இருக்கிறார்கள். ’ஸ்டாலின் அங்கிள்’(TVK Vijay Speech About MK Stalin) நீங்க செய்யறது தப்பு, சட்டம் ஒழுங்கு சரியில்லை. குற்றங்கள் குறையவில்லை, அனைத்து தரப்பு மக்களையும் ஏமாத்தறீங்க. வெரி ராங் அங்கிள்.

போர் முழக்கம் ஒலிக்கும் :

நான் மக்களை சந்திக்கும் போது எனது முழக்கம், இடி முழக்கமாக மாறும், பின்னர் அது போர் முழக்கமாக ஒலிக்கும். கட்சியை ஆரம்பித்து விட்டு மக்களை நாங்கள் சந்திக்கவில்லை. ஒவ்வொரு வீட்டிற்கு சென்ற பிறகுதான் கட்சி ஆரம்பித்து விட்டுதான் கட்சியை ஆரம்பித்து இருக்கிறோம்.

234 தொகுதிகளிலும் நானே வேட்பாளர் :

234 தொகுதிகளிலும் வேட்பாளராக விஜய்தான்(TVK Vijay) இருப்பார். எனவே, என்னை வேட்பாளராக ஏற்று தமிழக மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். 30 ஆண்டுகளாக என்னை ஏற்ற பெற வைத்தது தமிழக மக்கள். அவர்களுக்கு நன்றிக் கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்திருக்கிறேன். தமிழக மக்கள் எனக்கு கொடுத்த வரத்தை நான் திருப்பி கொடுத்தேன்.

மேலும் படிக்க : Actor Suriya : 2026 தேர்தலில் நடிகர் சூர்யா போட்டியிடுகிறாரா?

உங்களுக்கு உழைப்பதே என் வேலை :

எனக்கு இனி வேறு வேலையில்லை. உங்களுக்கு உழைப்பதே என் வேலை. நல்லது செய்ய மட்டுமே நான் இருப்பேன். அரசியல் தலைவன் என்றால், உண்மை மிக முக்கியம். உங்களுக்காக மட்டுமே இந்த விஜய் இருப்பேன். நான் சினிமாக்காரன் இல்லை, அரசியல்காரன். நல்ல தலைவர்களை தோற்கடித்தது அரசியல்வாதி.” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

==================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in