மதுரை மாநகராட்சியில் பலகோடி முறைகேடு :
Nainar Nagendran About DMK : மதுரை மாநகராட்சியில் 2022, 2023ம் ஆண்டுகளில் வரி வசூல் முறைகேடுகளால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேடு குறித்து மத்திய குற்றப் பிரிவினர் மற்றும் சைபர் கிரைம் போலீஸார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முறைகேடு வழக்கு - 8 பேர் கைது :
இந்த வழக்கில் மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். மண்டல தலைவர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
மாநகராட்சி முறைகேடு, பாஜகவினர் ஆர்ப்பாட்டம் :
இந்தநிலையில், மதுரை மாநகராட்சியில் ஏற்பட்ட முறைகேடுகளை கண்டித்து, நயினார் நாகேந்திரன்(Nainar Nagendran) தலைமையில் புதூர் பகுதியில் தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், அமித்ஷா என்றைக்கு மதுரைக்கு(Madurai) வந்து மீண்டும் ஒரு கூட்டணியை அமைத்து விட்டு சென்று விட்டாரோ, அன்றில் இருந்து அமித்ஷா டெல்லியில் இருந்து தமிழகத்திற்கு விமானம் ஏறிவிட்டார் என்று சொன்னால், திமுகவினருக்கு நடுக்கம் ஏற்படுகிறது.
மேலும் படிக்க : திமுகவை வீழ்த்துவதே பாஜக, விஜய் நோக்கம் : நயினார் திட்டவட்டம்
முதல்வருக்கு வேறு வேலையில்லை :
தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது. ஆட்சி மாற்றம் வர போகிறது. அந்த மாற்றத்திற்கு காரணமாக இருக்கிற, தமிழக மக்களுக்கு நன்றி, வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன் என்று அமித்ஷா(Amit Shah) இன்றைக்கு கூட பேசி இருக்கிறார். ஓரணியில் தமிழ்நாடு என்று முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். தமிழக முதல்வருக்கு வேறு வேலை இல்லை.
ஓரணியில் குற்றச் செயல்கள் :
ஓரணியில் காவல் நிலையத்தில் லாக்கப் டெத், ஓரணியில் கள்ளச்சாராயம் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். கள்ளச்சாரயம் குடித்து செத்து போனால் ரூ.10 லட்சம். விபத்தில் உயிரிழந்தால் ரூ.3 லட்சம். சட்டம் ஒழுங்கு சரியில்லை. தவறுகளை கூட்டணி கட்சி தலைவர் முத்தரசன் தட்டிக் கேட்கிறார். அவருக்கு பாராட்டுகள்
காங்கிரஸ் கட்சி எங்கே இருக்கிறது ? :
காங்கிரஸ் என்கின்ற ஒரு கட்சி தமிழகத்தில் இருக்கின்றதா, இல்லையா என்று யாருக்குமே தெரியவில்லை. எந்த விஷயத்தையும் அவர்கள் கையில் எடுப்பது இல்லை. காவல் நிலையம் மட்டுமல்ல, கள்ளச்சாராயமாக இருந்தாலும் கூட எந்த பிரச்னையையும் அவர்கள் கையில் எடுக்கவில்லை. கேட்டால், அவர்கள் கூட்டணியில் இருப்பதால் ஏதும் கேட்பதில்லை.
திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும் :
எனவே, 2026ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும். பாஜகவுக்கு மதுரை ராசியான இடம். திமுகவினருக்கு ராசி இல்லாத இடம்” இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.
=====