
நாடு திரும்பிய தமிழர்கள் :
ஈரானில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்கள் 15 பேர், சென்னை வந்தனர். விமான நிலையத்தில் அவர்களை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” மீனவர்களின் நிலை குறித்து தகவல் கிடைத்தவுடன், மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து, அவர்களை பத்திரமாக மீட்டதை சுட்டிக் காட்டினார்.
திமுகவை வீழ்த்துவதே இலக்கு :
தவெக தலைவர் விஜய் பற்றி' கேள்விக்கு பதிலளித்த அவர், திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பது தான் எங்களுக்கும், விஜய்க்கும் இருக்கும் பொதுவான நோக்கம். அந்த ஒற்றுமையின் காரணமாக அடிப்படையில் கூட்டணி குறித்து பரிந்துரைத்தேன்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக-அதிமுக இணைந்து செயல்படுவதே, திமுக தலைவர்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
யாரெல்லாம் பிடீம்? :
எந்தக் கட்சியை பார்த்தாலும் அவர்களை பி.டீம் என்று அழைப்பது திமுகவின். முன்பு கமலை அப்படி குறிப்பிட்டனர். தற்போது அவர் திமுக சார்பில் எம்பியாகி இருக்கிறார்.
அதேபோன்று, விஜய்யையும், பாஜகவின் பி.டீம் என்று திமுகவினர் விமர்சித்து வருவதாக நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.
=====