ADMK MLA Badge Beware Of Kidneys on Namakkal Kidney Theft Issue in TN Assembly Session 2025 
தமிழ்நாடு

TN Assembly: கிட்னிகள் ஜாக்கிரதை : பேட்ச் அணிந்த ADMK எம்எல்ஏக்கள்

ADMK MLA Badge on Namakkal Kidney Theft Issue : கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக கவனத்தை ஈர்க்கும் வகையில், அதிமுக எம்எல்ஏக்கள் ‘கிட்னிகள் ஜாக்கிரதை' என பேட்ஜ் அணிந்து பேரவைக்கு வந்தனர்.

Kannan

தமிழக சட்டசபை கூட்டம் :

ADMK MLA Badge on Namakkal Kidney Theft Issue : தமிழக சட்டப்பேரவையின் மூன்றாம் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் தங்கள் கண்டனத்தை பதிவு செய்யும் வகையில் அதிமுக எம்எல்ஏக்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து அவைக்கு வந்திருந்தனர். அதிமுக, திமுக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. பின்னர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி திருட்டு

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில், வறுமையில் வாடும் விசைத்தறி பெண் தொழிலாளர்களைக் குறிவைத்து, சட்டவிரோதமாக கிட்னி விற்பனை செய்து வந்த பெரும் மோசடி அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. சிறப்பு புலனாய்வுக் குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், இடைத்தரகர்களாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் ஸ்டான்லி மோகன் மற்றும் ஆனந்த் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். ஆளுங்கட்சிக்கு சொந்தமான மருத்துவமனைகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.

மேலும் படிக்க : கிட்னி திருட்டை பேசிய திமுக எம்எல்ஏ கதிரவன் : அண்ணாமலை விளாசல்

’கிட்னிகள் ஜாக்கிரதை’ - அதிமுக பேட்ஜ்

இந்தநிலையில், சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக எம்எல்ஏக்கள், கிட்னி திருட்டு விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து, ‘கிட்னிகள் ஜாக்கிரதை’(Beware Of Kidney Badge) என்ற பேட்ஜ் அணிந்து வந்து இருந்தனர். அதிமுக சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டு வரப்பட்டது.

==========