
நாமக்கலில் சிறுநீரக விற்பனை :
Annamalai on DMK MLA Kathiravan Speech : நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் ஏராளமான விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்து பண மோசடி செய்ததாக திடுக்கிடும் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் அங்குள்ள உள்ளூர் திமுகவினர் இடைத்தரகராக இருந்ததாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.
திமுக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு :
இந்நிலையில், கிட்னி திருட்டு குறித்து பொதுமக்கள் மத்தியில் பேசும் திமுக எம்எல்ஏ கதிரவனின் வீடியோவை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ளார். இதில், கிட்னி திருட்டை ஒப்புக் கொண்டு பேசும் அவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. திருச்சி மருத்துவமனையில் சட்ட விரோதமாக செய்யப்பட்ட சிறுநீரக அறுவை சிகிச்சை மூலம் கிடைத்த லாபத்தை தந்தையின் ரோல்ஸ் ராய்ஸ் காரின் ரூ.14.5 கோடியுடன் ஒப்பிட்டு அவர் பேசியது சர்ச்சையாகி உள்ளது.
கிட்னி திருட்டு மூலம் பணம் :
இதுபற்றி அண்ணாமலை கூறியிருப்பதாவது, “இது நகைச்சுவை அல்ல. நாமக்கல்லை சேர்ந்த ஏழை நெசவாளர்கள் ஏமாற்றப்பட்டு, அவர்களின் சிறுநீரகங்கள் திருடப்பட்டு இருக்கின்றன. வீடியோவில், தமது மருத்துவமனை(Dhanalakshmi Srinivasan Medical College) இந்த கிட்னி வர்த்தகத்தில் குறைந்தது ரூ.7.5 கோடி சம்பாதித்ததாகவும் ஒப்புக் கொள்கிறார்.
மேலும் படிக்க : 'கிட்னி திருட்டு இல்லை, முறைகேடு': விளக்கத்துக்கு அண்ணாமலை கண்டனம்
திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை :
ஆனாலும் அவர் மீது திமுக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த கிட்னி(Kidney Theft) திருட்டு விவகாரத்தில் இடைத்தரகரான திராவிட ஆனந்தன் கைது செய்யப்பட்டாரா? என அண்ணாமலை கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இந்தப் பதிவுடன் திமுக எம்எல்ஏ கதிரவன்(DMK MLA Kathiravan) பேசும் 36 விநாடிகள் கொண்ட வீடியோவையும் அண்ணாமலை இணைத்துள்ளார்.
====