Edappadi Palanisamy Appeal Rejected Against AIADMK General Secretary Case Update 
தமிழ்நாடு

AIADMK Case : அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு : எடப்பாடி மனு தள்ளுபடி

AIADMK General Secretary Case : அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி, எடப்பாடி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

Kannan

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி :

AIADMK General Secretary Case Update : 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தீர்மானத்திற்கு எதிராக, கட்சி உறுப்பினர் சூரியமூர்த்தி என்பவர், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பு மனு :

இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ”சூரியமூர்த்தி, அதிமுக உறுப்பினரே அல்ல எனவும், உறுப்பினராக இல்லாத சூரியமூர்த்தி, கட்சி செயல்பாடு குறித்தும் கேள்வி எழுப்ப முடியாது” எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எடப்பாடிக்கு புதிய நெருக்கடி :

வழக்கை விசாரித்த நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சிவசக்திவேல் கண்ணன், ”கட்சி விதிப்படி பொதுச் செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த விதிகளின்படி பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என தெரிவிக்கவில்லை என்பதால், இந்த வழக்கு விசாரணைக்குரியது எனக் கூறினார். சூரியமூர்த்தியின் வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். “பொதுக்குழு மூலம் இபிஎஸ்-ஐ தேர்ந்தெடுத்தது, கட்சி விதிகளுக்கு எதிரானது,” என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க : ஸ்டாலின் ஆட்சியில் எங்கும் ஊழல் : எடப்பாடி கடும் விமர்சனம்

அரசியல் உத்திகள் பாதிக்கப்படும் :

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, எடப்பாடியின் தலைமை பதவி குறித்த கேள்வியை எழுப்பி இருக்கிறது. அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு இடையேயான மோதல் தொடரும் நிலையில், இந்த தீர்ப்பு, எடப்பாடியின் எதிர்கால அரசியல் உத்திகளை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

====