
கச்சத்தீவை தாரைவார்த்த திமுக :
Edappadi Palanisamy About DMK Corruption : பிரசார சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக ராமநாதபுரத்தில் மக்களிடையே பேசிய அவர், 'திமுக ஆட்சியில்தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது, 16 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றும் கச்சத்தீவை மீட்க திமுக எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. மீனவர்கள் மீது அக்கறை உள்ளவர் போல முதல்வர் ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் :
தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனையில் 1,000 கோடி ரூபாய் வரை ஊழல்(DMK Liquor Scam) நடந்துள்ளது. திமுக ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனம் போல அவர்களது குடும்பத்தினர் மட்டுமே தலைமை பதவிக்கு வருகின்றனர். ஸ்டாலின் ஆட்சியில் எல்லாமே ஊழல்தான்.
சிறுபான்மையினர் நலனில் அதிமுக :
மீனவர்கள் பிரச்சினைக்கு காரணம் என்று மத்திய அரசு மீது பழி போடுவது சரியல்ல. ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு அரிசி, ஹஜ் புனித பயணத்திற்கு நிதியுதவி என சிறுபான்மையினர் நலனுக்காக, அதிமுக ஆட்சி காலத்தில், பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளோம். மதம், சாதியின் பெயரால் சிலர் கலவரத்தை துாண்டுகின்றனர்.
மேலும் படிக்க : திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன் : எடப்பாடி பழனிசாமி சபதம்
மக்களை ஏமாற்றும் திமுக :
சிறுபான்மையினர் மீது அக்கறை உள்ளது போல திமுகவினர் மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். எங்களை பொறுத்தவரை ஆண், பெண் என்ற இரண்டு சாதிதான், அதிமுக சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி. இந்த உண்மை தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும்.” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
======