Edappadi Palaniswami has sharply criticized Chief Minister Vijay, alleging that his administration is merely "making Reels" .
அதிமுக பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாகவும், மக்கள் நலன்களைப் புறக்கணித்து ரீல்ஸ் அரசாக செயல்பட்டு வருவதாகவும் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
நிதி நெருக்கடியும் விலைவாசி உயர்வும்
தவெக அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே தமிழகத்தின் கடன் சுமையை ரூ. 40,000 கோடி வரை அதிகரித்துள்ளதே இந்த அரசின் சாதனையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு
மேலும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலைகள் 25 சதவீதம் வரை உயர்ந்து நடுத்தரக் குடும்பங்களை கடுமையாக பாதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிர்வாக சீர்கேடு மற்றும் விமர்சனங்கள்
மக்கள் சந்திக்கும் குடிநீர் தட்டுப்பாடு, விவசாயிகள் பிரச்சனை மற்றும் விலைவாசி உயர்வு போன்றவற்றை சரிசெய்யாமல், சமூக வலைத்தளங்களில் விளம்பரம் தேடும் ரீல்ஸ் அரசாகவே இது நீடிக்கிறது.
முதலமைச்சரின் செயல்பாடுகள்
அரசு அலுவலர்கள் போல் முதலமைச்சர் காலை 10 மணிக்கு அலுவலகத்திற்கு வந்து மாலை 5 மணிக்குக் கிளம்பி விடுவதாகவும், சட்டமன்றத்திலோ அல்லது ஊடகங்கள் வாயிலாகவோ எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
கடன் சுமை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் நிர்வாகத் திறனின்மையால் இந்த ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது என்றும் எடப்பாடி பழனிசாமி தனது பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: ”சென்னையில் அரிசி, கோதுமை, காய்கறிகள் விலை உச்சம்” : அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு : செலவுகள் அதிகரிப்பு..!
============